ரவா இட்லி வாங்கி, குண்டு வைத்து வந்த நபர் - வெறும் 9 நிமிஷம்! ராமேஸ்வரம் கஃபேவில் நடந்தது இதுதான்!

Banglore Bomb Blast Issue: பெங்களூரு உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பில், சந்தேகிக்கப்படும் நபர் எப்போது ராமஸ்வரம் கஃபே உள்ள வந்து, குண்டை வைத்து சென்றார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 4, 2024, 05:48 PM IST
  • இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயம் அடைந்தனர்.
  • அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
  • சிசிடிவி வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ரவா இட்லி வாங்கி, குண்டு வைத்து வந்த நபர் - வெறும் 9 நிமிஷம்! ராமேஸ்வரம் கஃபேவில் நடந்தது இதுதான்! title=

Banglore Rameshwaram Cafe Bomb Blast Issue: பெங்களூருவில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில், பெங்களூரு போன்ற பெருநகரிலேயே இதுபோன்ற குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையிலெடுத்துள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூரு ப்ரூக்ஃபீல்ட் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி மாலை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மொத்தம் 10 பேர் காயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவருக்கு தொடர்பிருப்பது சிசிடிவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து என்ஐஏ அவரை கண்டுபிடிக்க தொடர் விசாரணையில் இறங்கி உள்ளது. 

வெறும் 9 நிமிடங்கள்...

குண்டுவெடிப்பு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் அந்த இளைஞர், முகக்கவசம் அணிந்திருந்த நிலையில், அவர் கிரே நிறத்திலான டீ-சர்ட்டை அணிந்திருந்தார். தலையில் தொப்பியும் அணிந்திருந்தது சிசிடிவில் வீடியோவில் தெரிந்தது. அந்த வகையில், அந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த நேரத்தில், அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி வீடியோக்கள் மூலம் பல பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த நபர், ராமேஸ்வரம் கஃபேவிற்கு உள்ளே சென்று, வெடிகுண்டை வைத்து வெளியே வர வெறும் 9 நிமிடங்களிலேயே எடுத்தது அந்த வீடியோவை ஆய்வு செய்ததில் தெரிந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | லஞ்ச வழக்குகளில் எம்பி எம்எல்ஏக்கள் விலக்கு கோர முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வெடிகுண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் அந்த நபர், ஒரு பேருந்தில் இருந்து இறங்கி, ராமேஸ்வரம் கஃபேவிற்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு ரவா இட்லியை ஆர்டர் செய்த அந்த நபர் அதனை சாப்பிட்டுவிட்டு வெளியே வருகிறார். அவர் அந்த உணவகத்தின் உள்ள 9 நிமிடங்களே செலவிட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் 2 மணிநேரம் வரை அந்த சிசிடிவி வீடியோ ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.. 

வந்தது முதல் சென்றது வரை...

கிரே டீ-சர்ட், வெள்ளை தொப்பி, முகக் கவசம் உள்ளிட்டவற்றை அணிந்திருந்த நபர் பேருந்தில் இருந்து காலை 11.10 மணிக்கு இறங்கினர். மேலும், சரியாக 11.34 மணிக்கு அந்த நபர் ராமேஸ்வரம் கஃபேவிற்கு ஒரு பேக்குடன் செல்கிறார். அதில்தான் அந்த வெடிகுண்டு இருந்திருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து, 11.38 மணிக்கு தோளில் பேக்குடனும், கையில் ரவா இட்லியுடனும் நின்றுகொண்டிருந்தார். 

சரியாக 11.44 மணிக்கு ரவா இட்லியை சாப்பிடாத அவர் கைக்கழுவிவிட்டு உணவகத்தில் இருந்து வெளியே வருவது தெரியவந்தது. 11.50 மணிக்கு அந்த நபர் சாலையில் தனது வாட்சை பார்த்தபடி நடந்து செல்வது பதிவாகி உள்ளது. சரியாக மதியம் 12.56 மணிக்கு வெடிகுண்டு வெடித்தது. அதாவது, 11.34 அணிக்கு உள்ளே சென்ற அவர் 9 நிமிடங்களிலேயே வெளியே வந்த நிலையில், அவர் வெளியேறி சுமார் 50 நிமிடங்களில் குண்டுவெடித்துள்ளது. 

சந்தேகிக்கப்படும் அந்த நபர் எந்த வழியாக சென்றிருப்பார் என்ற ரீதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த குண்டுவெடிப்பு சார்ந்து 40 - 50 சிசிடிவி வீடியோக்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், விரைவில் குற்றவாளியை கைது செய்வோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பாஜகவுக்கு பிரதமர் மோடி கொடுத்த நன்கொடை... எவ்வளவு தெரியுமா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News