4 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான தேதி இன்று அறிவிப்பு!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!

Last Updated : Oct 6, 2018, 11:36 AM IST
4 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான தேதி இன்று அறிவிப்பு! title=

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைப்பெற்று வரும் மாநில அரசின் ஆட்சி இந்தாண்டின் இறுதியில் முடிவடையும் நிலையில் இம்மாநிலங்களுக்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பினை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இதே வேலையில் கடந்த மாதம் சட்டசபை கலைக்கப்பட்ட தெலுங்கானா-விற்கும் இன்று தேர்தலில் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தேர்தல் தேதி குறித்த விவரங்களை வெளியிட பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்துள்ளது தேர்தல் ஆணையம். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களா தேர்தல் நடைபெறும். மற்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு ஒரு கட்டமாக நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து மாநில தேர்தல் நடைமுறைகளும் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் ஆணையம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் 25,000 துருப்புக்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 

மிசோரம் சட்டமன்ற ஆயுட்காலம் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முடிவடையும் நிலையில், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் முறையே ஜனவரி 5, 2019, ஜனவரி 7 மற்றும் ஜனவரி 20, 2019 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது.

தெலுங்கானா மாநிலத்தின் சட்டமன்ற ஆட்காலம் முடிவதற்கு 9 மாதங்கள் முன்னதாகவே முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் சட்டமன்றத்தை கலைத்தார். தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்று முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் பிரதான போட்டியாளர்களாக உள்ளனர். ராஜஸ்தானில் 2013-ஆம் ஆண்டிலிருந்து பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது!

Trending News