புதுடெல்லி: ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களில் இன்று, பஞ்சாபில் 117 சட்டசபை தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தின் 59 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
பஞ்சாபில் உள்ள அனைத்து 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று (2022, பிப்ரவரி 20 ஞாயிற்றுக்கிழமை) ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் யாருக்கு வெற்றி என்பதை கணிப்பது அசாதரணமான ஒன்றாக இருக்கும் சூழலில் அரசியலில் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் பல பரிட்சையாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.
மேலும் படிக்க | காலம் மாறுகிறது காற்று பாஜக பக்கம் வீசுகிறது - குஷ்பூ
ஆழமான சமூக பிளவுகளுக்கு எப்போதும் பெயர் பெற்ற மாநிலத்தில் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அகாலிதளம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கரம் கோர்த்து களத்தில் இறங்கியுள்ளது.
முதலமைச்சர் சரண்ஜித்சிங் சன்னி, சித்து, அமரிந்தர் சிங், பிரகாஷ் சிங் பாதல், குல்வந்த் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
117 சட்டமன்றத் தொகுதிகளுக்கு1,304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குரிமை பெற்ற 2.14 கோடி வாக்காளர்களுக்காக 24 ஆயிரத்து 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவும், தலைவர்களின் கருத்தும்
உத்தரப்பிரதேசத்தின் 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 20) காலை 7 மணிக்குத் தொடங்கியது.
வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை தொடரும். மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் 2.15 கோடி வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தின் மூன்றாம் கட்ட தேர்தலில் களத்தில் உள்ள 627 வேட்பாளர்களின் தலைவிதியை முடிவு செய்யும் நாள் இன்று.
உத்தரப் பிரதேச மாநில தேர்தலின் மூன்றாம் கட்டத்தில் 59 சட்டசபை தொகுதிகளில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மூன்றாவது கட்டத்தில் , 2.15 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில் 1.16 கோடி ஆண்கள், 99.6 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மற்றும் 1,096 மூன்றாம் பாலின வாக்காளர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க | கள்ள ஓட்டு சர்ச்சை - வாக்கை பதிவு செய்தார் எல்.முருகன்
15,553 வாக்குச்சாவடி மையங்களில் அமைந்துள்ள 25,741 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
தற்போது பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் சமாஜ்வாதி கட்சி திரும்புமா இல்லை வீழுமா என்பதற்கான கடும் போட்டிக்கான களம், தேர்தல் களமாக இருப்பதால், வாக்குப்பதிவு மும்முரமாக தொடங்கியிருக்கிறது.
மேலும் படிக்க | அலிபாபா உட்பட 54 சீன செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR