காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தில் காலியாக உள்ள 111 பணியிடங்களுக்கு 2,500 இளைஞர்கள் விண்ணப்பித்து தேர்வில் பங்கேற்றனர்.
புல்வாமா பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ படையினர் கொல்லப்பட்ட நிலையில் காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டுவது நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தில் காலியாக உள்ள 111 பணியிடங்களுக்கு வீரர்களை தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது. இதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதையடுத்து ராணுவத்தில் சேர நேற்று காஷ்மீர் இளைஞர்கள் பெருமளவில் திரண்டனர்.
மொத்தம் உள்ள 111 இடங்களுக்கு 2,500 இளைஞர்கள் திரண்டனர். அவர்களுக்கு பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு இறுதியாக அவர்களில் இருந்து 111 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.