இன்று சர்வதேச சிவில் சேவை தினம்!!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21-ம் தேதி இந்தியாவில் சிவில் சர்வீசஸ் தினம் அல்லது தேசிய குடிமை பணிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Last Updated : Apr 21, 2018, 03:21 PM IST
இன்று சர்வதேச சிவில் சேவை தினம்!! title=

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21-ம் தேதி இந்தியாவில் சிவில் சர்வீசஸ் தினம் அல்லது தேசிய குடிமை பணிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இத்தினமானது 1947-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதியில் இருந்து அரசாங்க ஊழியர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தினமாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இத்தினமானது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக கருதப்படும் ஐ.ஏ.எஸ்.,(நிர்வாகம்),  ஐ.பி.எஸ்.,(காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது. 

இந்த தினமானது 2006-ம் ஆண்டு டெல்லி விஜய பவனில் முதல் முதலில் நடைபெற்றது என்பது கவனிக்கத்தக்கது. இன்றைய நாளில் மிகச் சிறந்த சேவை புரிந்த அரசு அதிகாரிகளுக்கு, சிறந்த பொது சேவைக்கான பிரதமர் விருது வழங்கி கவுரவிக்கப்படும். 

இந்த நாளில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அரசாங்க ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் சந்தித்து பொதுமக்களுக்கு வேலை செய்யும் ஒருவரின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள்.

கடந்த 2017-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி நேர்மையான அதிகாரிகளுக்கு 12 விருதுகளை வழங்கினார். இந்த விருதுகள் மூன்று வகைகளில் வழங்கப்பட்டன. அதில், எட்டு விருதுகள் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மூன்று மலைப் பகுதிகளை உள்ளடக்கியது. ஏழு விருதுகள் யூனியன் பிரதேசங்களைக் கொண்ட மீதமுள்ள 18 மாநிலங்களை உள்ளடக்கியது.

Trending News