புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோவில் நிலையை, சீனா திடீரென நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிரதமர் மோடி உயர் அதிகாரியுடன் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி வருவதாகக் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. மறுபுறம், லடாக் துணை நிலை கவர்னர் டெல்லிக்கு வந்து சமீபத்திய நிலைப்பாடு குறித்து அதிகாரிகளுக்கு விளக்கினார்.
சீனத் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படும் எந்த விதமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று ராணுவம் கூறியுள்ளது.
ஆகஸ்ட் 29-30ம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் லடாக்கில் (Ladakh) எல்ஏசி (LAC)பகுதிக்கு, அதாவது லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் அருகில் பாங்காங்கில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே புதிதாக மோதல்கள் வெடித்தன
இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து, சீனாவின் சதியை முறியடித்தது. கிழக்கு லடாக்கில் எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க இரு நாடுகளும் இராஜதந்திர மற்றும் இராணுவ நிலையிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்திய இராணுவம் பேச்சு வார்த்தையின் மூலம் அமைதியை நிலைநாட்ட உறுதியாக இருக்கிறது. ஆனால் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் எந்த விதமான சமரசத்தையும் செய்து கொள்ளாது என தெளிவுபடக் கூறியுள்ளது.
ALSO READ | இந்திய சீன துருப்புகளுக்கு இடையில் லடாக்கின் பேங்காங் பகுதியில் மோதல் வெடித்தது..!!
இருப்பினும், பாங்காங் த்சோவின் வடக்கே சீனா தனது தற்போதைய இராணுவ நிலையில் இருந்து பின்வாங்க மறுத்துவிட்டது. பாங்கோங் த்சோவில், ஃபிங்கர் -5 மற்றும் 8 க்கு இடையில் சீனா தங்கள் நிலைகளை வலுப்படுத்தியுள்ளது. ஃபிங்கர் -4 முதல் ஃபிங்கர் -8 வரை ஆக்கிரமித்த 8 கி.மீ நீளமான பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி பின்வாங்க சீனா மறுத்துவிட்டது.
மறுபுறம், சீன விமானப்படை தனது ஜே -20 ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களை எல்லைக்கு நெருக்கமாக நிறுத்தியுள்ளது.
அண்மையில் விமானப்படையில் இணைந்த ரஃபேல் போர் விமானங்களை இந்தியா இயக்கிய பின்னர் சீன விமானப்படை லடாக் அருகே விமான தளங்களில் தனது போர் விமானங்களை அனுப்பத் தொடங்கியது.
ALSO READ | சீனாவின் எதிர்ப்பை மீறி தென் சீனக் கடலில் நிறுத்தப்பட்ட இந்திய போர்க்கப்பல்...!!!
கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி, லடாக்கின் கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை பதற்றம் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.