ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக தலைவர் அமித் ஷா: பலியான யாத்திரிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. இச்சம்வம் மிக கொடுமையாது.
ராம்நாத் கோவிந்த்: இச்சம்பவம் மிகவும் கோழைத்தனமானது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.
அருண் ஜெட்லி: அமர்நாத் யாத்திரிகள் மீதான தாக்குதல் மிகவும் கண்டனத்திற்குரியது. பயங்கரவாத்திற்கு எதிரான நமது உறுதிபாட்டை மேலும் பலப்படுத்த வேண்டும்.
ராஜ்நாத் சிங் : காஷ்மீரில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக அம்மாநில முதல்வர், கவர்னர், மற்றும் போலீஸ் டி.ஜி.,க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான நிவாரணமே தற்போது முக்கியம்.
ஜம்மு முதல்வர்: என்ன வார்த்தைகளால் இதற்கு கண்டனம் சொல்வதென்றே தெரிவில்லை. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
ஜம்மு துணை முதல்வர்: காயமடைந்த 15 பேரும் அபாய கட்டத்தை தாண்டி விட்டனர். அப்பாவி மக்களை தாக்குபவர்கள் மன்னிக்கப்படமாட்டார்கள். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்.
பிரதமர் மோடி கண்டனம்:-
ஜம்மு - காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்டுள்ளகொடூரத் தாக்குதலால் நான் அடைந்த வேதனைகளை தெரிவிக்க வார்த்தைகள் இல்லை. இதுதொடர்பாக ஆளுநர் என்.என். வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி ஆகியோருடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது அவர்களிடம் தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு அளிக்கும் என்று உறுதியளித்தேன். இத்தகைய கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்றார்.