புது டெல்லி: ஊரடங்கு காலத்தில் உள்நாட்டு அல்லது சர்வதேச பயணங்களுக்காக COVID-19 பொது முடக்கத்தின் போது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு உடனடியாக விமான நிறுவனங்கள் முழு பணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும் என்று சிவில் ஏவியேஷன் அமைப்பு டிஜிசிஏ (Directororate General of Civil Aviation) பரிந்துரைத்துள்ளது. மேலும் டிக்கெட் மூலம் சேகரிக்கப்பட்ட தொகையை 15 நாட்களுக்குள் திருப்பித் தர அனைத்து முயற்சிகளையும் விமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ - DGCA) உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
முதல் ஊரடங்கு மார்ச் 25 முதல் 2020 ஏப்ரல் 14 வரை காலகட்டத்தில் டிக்கெட்டுகள் (Lockdown Ticket Booking) முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், முதல் மற்றும் இரண்டாவது ஊரடங்கு காலங்களில் 2020 மார்ச் 25 முதல் மே 3, 2020 வரையிலான காலகட்டத்தில் பயணங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் பயணிகளுக்கு விமான சேவை வழங்கப்பட வில்லை என்றால், முழு பணத்தை அவர்களுக்கு திரும்ப செலுத்த உடனடியாக விமான நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டும். (இது ஏப்ரல் 16, 2020 தேதியிட்ட MoCA இன் OM ஐக் கொண்டு கட்டாயப்படுத்தப்படுகிறது, ஏனெனில் விமான நிறுவனங்கள் அத்தகைய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யக்கூடாது).
ALSO READ | ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான முழு பணத்தையும் திருப்பித் தரும் விமான நிறுவனங்கள்|
ஜூன் 12 ம் தேதி, "பிரவாசி லீகல் செல்" (Pravasi Legal Cell) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட்டுக்கான பணத்தை முழுமையாக திருப்பித் தருவதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதிக்க மற்றும் செயல்படுமாறு மத்திய அரசு, டி.ஜி.சி.ஏ மற்றும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
விமானப் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் ஆணையம் தனது பிரமாணப் பத்திரத்தில், நிதி நெருக்கடியின் காரணமாக விமானத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், விமான நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு சமமான கிரெடிட் ஷெல்லை (Credit Shell) வழங்குவார்கள். இது டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளின் பெயரில் வழங்கப்படும். அதாவது உள்நாட்டு பயணங்களுக்கான டிக்கெட் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் தளங்கள் உட்பட முகவர் மூலமாகவோ வழங்கப்படும்.
பயணிகள் தனது விருப்பப்படி எந்த வழியிலும் மார்ச் 31, 2021 வரை கிரெடிட் ஷெல்லை பயன்படுத்த முடியும் என்றும், பயணிகள் கிரெடிட் ஷெல்லை விட மதிப்புள்ள டிக்கெட்டை வாங்க விரும்பினால், அதற்கான பணத்தைப் பயணிகள் செலுத்த வேண்டும்.
அதபோல கிரெடிட் ஷெல்லை விட குறைவான மதிப்புள்ள டிக்கெட்டை பயணிகள் வாங்க விரும்பினால், மீதமுள்ள தொகை பயணிகளுக்கு திருப்பித் தரப்படும்.
இதேபோல், ஊரடங்கு காலத்தில் இந்திய கேரியர் அல்லது வெளிநாட்டு கேரியர் மூலம் சர்வதேச பயணங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளுக்கான டிக்கெட்டுகளை திருப்பித் தர டிஜிசிஏ ஒத்துக்கொண்டது.