சீனாவில் கோவிட்-19 தொற்று பாதிப்புகள் அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதற்கு மத்தியில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான ஆதார் பொனவாலா ஒரு ட்வீட்டில் மக்களை பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். கோவிஷீல்டு கோவிட் தடுப்பூசியை தயாரித்தது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா.
ஆதார் தனது ட்வீட்டில், "சீனாவில் இருந்து அதிகரித்து வரும் கோவிட் தொற்று பாதிப்புகள் பற்றிய செய்தி கவலை அளிக்கிறது, நமது சிறந்த தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் சாதனைப் பதிவைக் கருத்தில் கொண்டு நாம் பீதி அடையத் தேவையில்லை." சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்டு, கோவிட்க்கு எதிரான தடுப்பூசிகள் இந்தியாவில் மிக அதிக அளவில் போடப்பட்டுள்ளது. மேலும், மக்கள் நம்பிக்கை வைத்து, இந்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
கோவிட் தொற்று பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். மக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம் அணியுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் படிக்க | மீண்டும் கோவிட் நோய் பரப்பும் மரபணு மாறிய கொரோனா! பிறழ்ந்த வைரஸின் ரெளத்ரம்
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் சீனாவில் கோவிட்-பாசிட்டிவ் இறந்த உடல்கள் மருத்துவமனைகள் மற்றும் பிணவறைகளில் குவிந்து கிடப்பதைக் காட்டுகிறது. ஒரு வைரல் வீடியோவில், மருத்துவமனை மையத்தில் இறப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. சீனாவில் கோவிட் இறப்புகள் மில்லியனை எட்டும் என கூறப்படுகிறது.
சீன தலைநகரின் ஆதாரங்களின்படி, பிணவறைகளில் பணிபுரியும் மக்கள் கூடுதல் ஷிப்டுகளில் பணிபுரிகிறார்கள். கோவிட் பரவலின் 4 வது அலையால் உலகம் பாதிக்கப்படும் என்னும் அச்சம் நிலவும் நிலையில், சீன அரசாங்கம் தனது கடுமையான "பூஜ்ஜிய-கோவிட் கொள்கை" கட்டுப்பாடுகளை திடீரென நீக்கியது. சீனாவில் இருந்து வரும் சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நிபுணர்களின் கூற்றை உறுதிப்படுத்துகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ