ஆந்திர மாநில் கிழக்கு கோதாவரி பகுதியில் இருக்கும் கௌதமி அற்றில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் மாயமாகியுள்ளனர்!
இந்த விபத்தில் மாயவனவர்களை தேடும் பணியில் 20 பேர் கொண்ட குழு செயல்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலத்த காற்றினாலும், மழையின் காரணமாகவும் தேடுதல் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டு வருவதாக மாநில பேரிடர் மேளான்மை அதிகாரி தெரிவித்துள்ளார். எனினும் தேடுதல் பணியினை தீவிரமாக நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் மாணவர்களின் பெயர்கள் கொண்டிப்புடி ராமையா(13), பொலிசெட்டி வீரா மனிஷா(15), சுங்கரா ஸ்ரீமன்(15), திரிக்கொட்டி பிரியா(13), பொலிசெட்டி அனுஷா(14), பொலிசெட்டி சுஸித்திரா(12) மற்றும் கால்லா நாகமணி (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சாலடெவிரி பாலத்தில் இருந்து புஸ்வுலங்கா பகுதிக்கு பயணித்த இந்த படகில் 32 பேர் பயணித்ததாகவும், விபத்திற்கு பின்னர் 25 பேரினை பத்திரமாக மீட்டுள்ளதாகவும் பேரிடர் மேளான்மை குழு தெரிவித்துள்ளது.
துணை முதல்வர் N சின்ன ராஜப்பா தலைமையில் இந்த மீட்பு பணி நடைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.