இந்திய குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. டில்லியில் இந்தியா கேட் பகுதியில் அணிவகுப்பு மரியாதை நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கான ஜனாதிபதி மாளிகையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த 2014 முதல் 2017 வரை காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியாவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த வருடம் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு 4வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதனை மறுத்துள்ள பா.ஜ., இந்த வருடம் முதன்முறையாக ஆசியான் அமைப்பை சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அந்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இந்த ஆண்டு முதல் முறையாக ஆசியான் அமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு விஐபிக்கள் அமரும் மேடை சுமார் 100 அடி அகலத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவில், முதல் முறையாக 10 நாட்டு தலைவர்கள் பங்கேற்பதை முன்னிட்டு தில்லியில் பலத்த பாதுபாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.