காஷ்மீர் பிரச்சனை: மத்திய அரசுக்கு 2 வாரம் கெடு - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

இரண்டு வாரங்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் இயல்புநிலை திரும்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Last Updated : Aug 13, 2019, 01:51 PM IST
காஷ்மீர் பிரச்சனை: மத்திய அரசுக்கு 2 வாரம் கெடு - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை title=

புதுடெல்லி: இரண்டு வாரங்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் இயல்புநிலை திரும்ப வேண்டும். இல்லையென்றால் உச்ச நீதிமன்றம் தலையிடும் என நீதிபதிகள் மத்திய அரசை எச்சரித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கிய பிறகு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது.  ஒன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூடிய தனி யூனியன் பிரதேசமாக இருக்கும். மற்றொன்று லடாக் சட்டசபை இல்லாமல் ஒரு யூனியன் பிரதேசமாக இருக்கும் என அறிவிக்கபட்டது. இந்த அறிவிப்புக்கு முன்னர் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. மேலும் மாநிலத்தின் முக்கிய தலைவர்களான ப்ரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா போன்ற தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள தடைகளையும், கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிடக் கோரி காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரிணைக்கு வந்தது. 

அப்பொழுது மத்திய அரசு சார்பில், ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழலைப் பொறுத்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்தது. இதனையடுத்து இரண்டு வாரங்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் இயல்புநிலை திரும்ப வேண்டும். இல்லையென்றால் உச்ச நீதிமன்றம் தலையிடும் நிலைமை ஏற்ப்படும் என நீதிபதிகள் மத்திய அரசை எச்சரித்துள்ளனர்.

Trending News