கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு!!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, கர்நாடகாவிழும் பருவமழை தீவிரமடைந்து வருவதால் அணைகள் அனைத்தும் நிறைந்து வருகிறது.
இந்நிலையில், கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணிகளின் நீர்மட்டம் முளுகொள்ளலவை எட்டியுள்ள நிலையில் தற்போது உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்துவிடபட்டுள்ளது. மேலும், கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 40,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்.
கிருஷ்ணராஜசாகர் அணியில், 60,000 கன அடி உபரி நீர் வெளியேற்றபட்டு வருகிறது. இதையடுத்து, கே.ஆர்.எஸ், கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து ஏற்கனவே 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேறும் நிலையில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.