வேலை பளு, வாழ்வியல் சூழல், மன அழுத்தம், உடல் அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தலைவலி ஏற்படலாம். உறவுகள், தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உணவு முறை ஆகியவையும் இதற்கு பெரும் காரணமாக அமையலாம். இதை தவிர்க்க சில யோகாசன பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
1.பத்மாசனம்:
பத்மாசன யோகாப்பயிற்சி, செய்வதால் உடல் ரிலாக்ஸ் ஆகும் என கூறப்படுகிறது. இந்த பயிற்சியால், தோள்பட்டை, கழுத்து மற்றும் தலை ஆகிய பகுதிகல்தான் பெரும்பாலான சமயங்களில் தலைவலி ஏற்பட காரணமாக இருக்கிறது. இந்த ஆசனத்தை செய்வதால், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து மைக்ரேன் தலைவலி ஏற்படுவதில் இருந்து தடுக்கிறது.
எப்படி செய்ய வேண்டும்?
இருப்பதிலேயே மிகவும் ஈசியான யோகாசனம் இது. தரையில் அமர்ந்து உங்கள் வலது காலின் கணுக்காலை இடது தொடையின் மீது, இடது கணுக்காலை வலது கால் தொடையின் மீது வைத்து சம்மனம் போட்டு அமர வேண்டும். இரு கைகளையும் தொடை மீது வைத்து மூச்சை இழுத்து விட வேண்டும்.
2.அர்த்த மத்ஸ்யேந்திராசனம்:
அர்த்த மத்ஸ்யேந்திராசனம் ஆசனத்தை செய்யும் போது கழுத்து, முதுகு, முதுகுத்தண்டு மற்றும் தோள்பட்டை ஆகியவற்றை வைத்து செய்ய வேண்டும். இது, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இது, மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும் தலைவலியையும் தவிர்க்கலாம்.
எப்படி செய்வது?
தரையில் அமர்ந்து, கால்களை நன்றாக முன்னோக்கி நீட்ட வேண்டும்.
முட்டி வரை வலது கால் முட்டியை மடக்க வேண்டும்.
அதே போல வலது கையை பின்பக்கமாக வைத்து கையை தரையில் வைத்து உங்கள் பின்பகுதிக்கு நேராக வைக்கவும்.
இடது கையை தலைக்கு மேலாக தூக்க வேண்டும்.
இப்படியே 30 விநாடிகள் ஹோல்ட் செய்ய வேண்டும்
மேலும் படிக்க | யோகாசனம் செய்ய தெரியாதவர்களுக்கான ஆசனங்கள்! சிம்பிளாக இருக்கும் ட்ரை பண்ணுங்க..
3.உத்தானாசனம்:
உத்தானாசனம் ஆசனத்தை, செய்கையில் முதுகுத்தண்டு ரிலாக்ஸ் ஆகும். இதனால், உடல் அழுத்தத்தினாலும் ஏற்படும் தலைவலியை நீக்குகிறது. இந்த ஆசனத்தை குணிந்து நிமிர்ந்து செய்வதால், தலைக்கு ரத்த ஓட்டம் செல்கிறது. இதனால் தலைவலியை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம் என யோகாவால் பயன்பெற்றவர்கள் கூறுகின்றனர்.
4.சேது பந்தானாசனம்:
சேது பந்தானாசனம் ஆசனத்தை கைகள், முதுகு மற்றும் கால்களை உபயோகித்து செய்ய வேண்டும். இதனால் முதுகு, தோள்பட்டை மற்றும் முதுகுத்தண்டு ஆகிய உடற்பகுதிகள் வலுவடைவதுடன் தலைவலியும் போகும்.
5.விபரீத காரணி:
உடலில் இருக்கும் அழுத்தம் மற்றும் டென்ஷனை குறைக்க உதவும் ஆசனங்களுள் ஒன்று இது. இதை செய்வதால், மூளை உள்பட அனைத்து இடங்களுக்கும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதை உங்கள் தினசரி வர்க்-அவுட் ரொட்டீனில் சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக மாற்றம் தெரியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ