முடி பராமரிப்பு குறிப்புகள்: இன்றைய காலகட்டத்தில், மோசமான வாழ்க்கை முறை, உணவு மற்றும் மாசு ஆகியவை நம் தலைமுடியை சேதப்படுத்தி விடுகிறது. இதன் காரணமாக முன்கூட்டியே முடி நரைப்பது மற்றும் முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. எனவே முடியை கருப்பாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும், வலுவாகவும் மாற்ற, மக்கள் பல வகையான விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அவர்கள் எதிர்பார்த்த முடிவுவை பெறுவதில்லை. அந்த வகையில் உங்கள் முடி பிரச்சனையை தீர்க்க பயனுள்ளதாக இருக்கும் ஒரு மூலிகை எண்ணெயை பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம். இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் முடி நரைத்தல், பொடுகு மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கலாம். எனவே இந்த எண்ணெய் தயாரிக்கும் முறை மற்றும் அதன் பலன்களை தெரிந்து கொள்வோம்.
இந்த எண்ணெயின் சிறப்பு என்னவென்றால், இதை தயாரிக்க நீங்கள் கடைக்கு செல்ல வேண்டியதில்லை. இதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் உங்கள் சமையலறையிலேயே நீங்கள் எளிதாக பெறலாம்.
மேலும் படிக்க | உடல் எடை எகிறுதா? இப்படி பண்ணி பாருங்க.. ஜிம் போகாமலேயே ஜம்முனு குறைக்கலாம்!!
கருமையான கூந்தலுக்கு செம்பருத்தி எண்ணெய் செய்வது எப்படி ( Hibiscus Oil For Black Hair)
இந்த எண்ணெய் தயாரிக்க, செம்பருத்தி பூ, தேங்காய் எண்ணெய், துளசி, ஓமம் ஆகியவை தேவை. அதை செய்ய, ம்உதலில் தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூவை கலக்கவும். அதில் ஓமம் விதைகள் மற்றும் துளசி இலைகளை போட்டு நன்கு சூடாக்கி கொதிக்க வைக்கவும். இப்போது அதை ஆற வைத்து பின் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வடிகட்டி எடுக்கவும். ஆறியதும் இந்த எண்ணெயை முடியின் வேர்களில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
கருமையான கூந்தலுக்கு செம்பருத்தி ஹேர் பேக்
உங்கள் நரை தலைமுடி பிரச்சனை தீர்வு பெற செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாக அரைத்து அதில் சிறிது கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும். இப்போது அரைத்து வைத்த பேஸ்ட்டை முடியின் வேர்கள் முதல் நுனி வரை தடவி 1 மணி நேரம் ஊற வைத்துவிட்டு பிறகு நன்கு கழுவி விடுங்கள். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வரலாம்.
இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
இந்த எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எல்லாவற்றிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஓமத்தில் பொடுகு எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, அதே சமயம் துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் உச்சந்தலையை சுத்தம் செய்ய உதவும். இந்த எண்ணெய் முடிக்கு நன்மை பயக்கும். இதனை பயன்படுத்துவதால் முடி கருப்பாக மாறும். மேலும், பொடுகுத் தொல்லையுடன் நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் அதிலிருந்தும் விடுபடலாம். இந்த எண்ணெய் உச்சந்தலையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.
கூந்தல் நரைப்பதற்கான காரணம்
இயற்கையாகவே உடலில் மெலனின் அளவு குறையும் போது அது கூந்தலிலும் பிரதிபலிக்கும். கருமையான கூந்தலுக்கு நிறத்தைக் கொடுப்பது இந்த மெலனின் தான். இந்த மெலனின் உடலில் குறையும் போது நமது கூந்தலின் நிறம் மாறுகிறது. இது நரைமுடிக்கு முக்கிய காரணமாகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உடல் இளைக்கும் இலட்சியத்தில் வெற்றிப் பெறுவதைத் தடுக்கும் பொதுவான தவறுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ