30 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் வியக்க வைக்கும் நன்மைகள்

No Sugar Challenge: நோ சுகர் சேலஞ்சுக்கு நீங்கள் தயாரா? ஒரு மாதம் சர்க்கரை உட்கொள்ளாமல் இருந்தால் (No Sugar Challenge) நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 28, 2023, 09:59 AM IST
  • ஆரோக்கியமான இதயம்.
  • எடை இழப்பு.
  • நாள்பட்ட நோய்களின் குறைவான ஆபத்து.
30 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் வியக்க வைக்கும் நன்மைகள் title=

No Sugar Challenge: நம்மில் பலர் இனிப்புகளை விரும்பி சாப்பிடுவோம். இருப்பினும், சர்க்கரை பெரும்பாலும் நமது ஆரோக்கியத்தின் எதிரியாகவே பார்க்கப்படுகிறது. அதிகப்படியான சர்க்கரை பயன்பாட்டால் பல உடல்நல கோளாறுகள் ஏற்பாடுகின்றன. இதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுவதுடன் இது உங்கள் பற்களுக்கும் தீங்கு விளைவிக்கும், உங்கள் எடையை அதிகரிக்கும். பிப்ரவரி 2023 இல் தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அதிக சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். 

தேநீர் மற்றும் இதர பானங்கள், பல உணவு வகைகள் என நாம் தினசரி உட்கொள்ளும் உணவுகளின் மூலம் நம் உடலில் சர்க்கரை (Sugar) சேர்கிறது. இதன் அளவு அதிகமாகும் போது அது பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. நாம் தினசரி உட்கொள்ளும் உணவில் இருந்து சர்க்கரையை குறைத்தால் நமக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். நோ சுகர் சேலஞ்சுக்கு நீங்கள் தயாரா? ஒரு மாதம் சர்க்கரை உட்கொள்ளாமல் இருந்தால் (No Sugar Challenger) நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.  

1. எடை இழப்பு (Weight Loss)
சர்க்கரை உணவுகளில் கலோரிகள் அதிக அளவில் காணப்படுவதோடு, அதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அளவு குறைவாக உள்ளது. எனவே இதை உட்கொண்டால் உடல் பருமன் அதிகரிக்கிறது. சர்க்கரை அளவைக் குறைப்பது அல்லது ஒரு மாதம் சாப்பிடாமல் இருப்பது எடை குறைவதற்கு வழிவகுக்கும், ஏனெனில் இதனால் கலோரி உட்கொள்ளல் குறைகிறது மற்றும் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. சர்க்கரையைக் குறைப்பதன் மூலம், ஒரு நபர் தனது கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த முடியும், மேலும் இது எடையைக் குறைக்க உதவுகிறது.

2. ஆரோக்கியமான இதயம் (Heart Care)

சர்க்கரை கொழுப்பாக மாறத் தொடங்கும் போது, ​​கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை அதிகரிக்கிறது. இரத்தம் இதயத்தை அடைவதில் சிரமத்தை எதிர்கொள்வதால், மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், சர்க்கரையை குறைப்பது இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கும்.

3. இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level) 
 
30 நாட்களுக்கு சர்க்கரையை குறைப்பது இரத்த சர்க்கரை அளவை குறைத்து கட்டுக்குள் ஒண்டு வர உதவுகிறது, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு அபாயத்தையும் இது குறைக்கிறது.

மேலும் படிக்க | Strong Bones: எலும்புகளை இரும்பைப் போல் வஜ்ரமாக்கும் கால்சியம் நிறைந்த உலர் பழங்கள்

4. பல் ஆரோக்கியம் (Dental Health)

சர்க்கரையைத் தவிர்ப்பது பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு துவாரங்கள் மற்றும் ஈறு நோய் அபாயத்தையும் குறைக்கும்.

5. நாள்பட்ட நோய்களின் குறைவான ஆபத்து (Immunity From Diseases)

சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் இதய நோய் போன்ற நாட்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

6. ஒளிரும் சருமம் (Skin Care)

அதிக சர்க்கரை உட்கொள்வது முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சினைகளை ஏற்பட வாய்ப்புள்ளது. சர்க்கரையை குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.

7. நல்ல மனநிலை (Good Mood)

நிலையான இரத்த சர்க்கரை அளவுகள் மனநிலையில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும், உணவில் சர்க்கரை அளவை குறைப்பது மனநிலை மாற்றங்களைக் குறைக்கும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

8. ஆரோக்கியமான குடல் ஆரோக்கியம் (Gut Health)

அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது குடல் பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைக்கும், சர்க்கரையை குறைப்பது ஆரோக்கியமான குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெந்தயம் உடம்புக்கு நல்லதுதான்! ஆனா, யாரு எப்போ சாப்பிடக்கூடாது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News