Ragi Koozh Benefits : தமிழர்களின் பாரம்பரிய மரபுகளும் ஒன்று, ஆடி மாதமானால் கூழ் ஊற்றுவது. சாமிக்கு படையலாக வைத்தாலும் அண்டா நிறைய செய்து ஒவ்வொருவருக்கு இந்தக் கூழையும், கருவாட்டுக் குழம்பையும், கூடவே கொஞ்சம் முருங்கைக்கீரை பொரியலையும் கொடுப்பர். இந்த கம்மங்கூழ் குடிப்பதனால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?
உடல் சூட்டை தணிக்கும்:
கம்மங்கூழை பலர் குடிப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, உடல் சூட்டை தணிக்கும் என்பதுதான். கோடை காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் வேளையில் உடலில் இருக்கும் உஷ்ணம் உஷ்ணம் இறங்குவதற்காக கம்மங்கூழை முன்னர் அனைவர் வீட்டிலும் தயாரித்து வந்தனர். ஆனால், இப்போது நிலை மாறிவிட்டது. ஆடி மாதம் போன்ற ஒரு சில நாட்களை மட்டுமே கூழை அனைவராலும் குடிக்க முடிகிறது.
கம்புவில் இருக்கும் நன்மைகள்:
தானிய வகைகளில் ஒன்றான கம்புவில், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் புரத அளவு மட்டும் 15 சதவிகிதம் இருக்கிறது. அது மட்டுமின்றி வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், நியாஸின் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களான இவை, கம்புகள் காணப்படுகின்றன.
ஆற்றல் அளிக்கும்:
வெயில் காலத்தில் உடலில் இருக்கும் சக்திகள் வேகமாக குறையும். அப்போது கம்மங்கூழ் குடித்தால் உடலுக்கு ஆற்றில் கிடைக்கும் என்பது பரவலாக நம்பப்படும் உண்மையாக இருக்கிறது. ஒருவர் கம்மங்கூழை தினமும் காலையில் குடித்தால். உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும் என்பது பழங்காலத்தில் இருந்து நம்மப்படுகிறது.
ரத்த சோகை:
கம்புவில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. உடலில் ரத்த செல்கள் அதிகமாக உற்பத்தியாவதற்கு ஒரு காரணமாகும். தினமும் கம்மங்கூழ் குடித்து வந்தால் ரத்த சோக நோய் சரியாகும் என்று கூறப்படுகிறது. உடலில் ரத்தம் சேர வேண்டும் என்றால் தினமும் கம்மங்கூழ் குடிக்கலாம் அல்லது மருத்துவரின் கூற்று.
மேலும் படிக்க | சிறு தானியங்களின் ராணியான ராகியை... யார் சாப்பிடலாம்.. யார் சாப்பிடக்கூடாது..!!
இதய நோய்:
கம்மங்கூழை தினமும் குடித்து வந்தால் உடலில் இருக்கும் டிரைகிளிசரைடுகளின் அளவு குறையும். இதனால் ரத்தத்தின் அடர்த்தி குறைந்து ரத்தம் உறைவது தவிர்க்கப்படும். இதனால் பக்கவாதம் போன்ற நோய்களும் வராமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வைட்டமின் பி சத்துக்கள்:
உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளை குறைக்க இது ரத்தத்தில் ஹோமோசைசனின் அளவை குறைக்கிறது. இதனால் ரத்தத்தில் இருக்கும் நல்ல கொழுப்புகளின் அளவு அதிகரிக்கும்.
எடை குறையும்:
கம்மங்கூழ், உடல் எடை பராமரிப்பிற்கும் உதவுகிறது. கம்மங்கூழ் குடித்தால், வயிறு நிரம்பியது போன்ற உணர்வு இருக்கும். இதனால் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம். இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கேழ்வரகில் கொட்டிக்கிடக்கு ஏராளமான நன்மைகள்: கேட்டு வாங்கி சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ