உடல் எடை குறையணுமா: இந்த சூப் குடிங்க, சூப்பரா குறையும்

Weight loss Soup For All: சில சூப்கள் உடல் எடையை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் உணவில் கொஞ்சம் சூப் சேர்த்துக் கொண்டால், கண்டிப்பாக உங்கள் எடையைக் குறைக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 16, 2022, 03:28 PM IST
  • சூப்கள் மூலம் கண்டிப்பாக உங்கள் எடையைக் குறைக்கலாம்.
  • பட்டாணி மற்றும் கேரட் சூப் உடல் எடையை குறைக்க உதவும்.
  • பருப்பு மற்றும் பூசணி சூப் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உடல் எடை குறையணுமா: இந்த சூப் குடிங்க, சூப்பரா குறையும் title=

உடல் எடையை குறைக்கும் சூப்: உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளன. எனினும், பல வித வழிகளை கடைபிடித்தும் சிலரால் உடல் எடையை குறைக்க முடிவதில்லை. தங்கள் உணவில் தேவையான மாற்றங்களை செய்யாததே இதற்கு காரணமாகும். 

சில சூப்களின் உதவியுடன் எடையை எளிதாக குறைக்கலாம் என்பது பலருக்குத்  தெரியாது. அவை எந்தெந்த சூப்கள் என்று இந்த பதிவில் காணலாம். இவற்றின் உதவியுடன் நீங்கள் எளிதாக உங்கள் எடையை குறைக்க முடியும். 

முட்டைக்கோஸ் சூப் உடல் எடையை குறைக்கும்

முட்டைக்கோஸ் சூப் உடல் எடையை குறைக்க உதவும். இந்த சூப் செய்வதும் எளிது. புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் கே, சி மற்றும் பி6 மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக இதில் உள்ளன. இதன் நுகர்வு எடையைக் குறைக்க உதவுகிறது.

பருப்பு மற்றும் பூசணி சூப் நன்மை பயக்கும்

பருப்பு மற்றும் பூசணி சூப் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இரண்டு பொருட்களையும் நாம் பொதுவாக தனித்தனியாக உட்கொண்டிருப்போம். ஆனால் இவை இரண்டையும் கலந்து சூப் செய்யும் போது அதுவும் உடல் எடையை குறைக்க உதவும் என்பது சிலருக்குத்தான் தெரியும். பருப்பு மற்றும் பூசணிக்காயில் ஏராளமான புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

மேலும் படிக்க | உங்கள் உடலில் கல்லீரல் நலமா? இந்த அறிகுறிகள் கொண்டு கண்டறியலாம் 

கோழி சூப் குடிப்பது நல்லது 

சிக்கன் சூப் உடல் எடையை குறைக்க உதவும். இதற்கு முதலில் சிக்கனை நன்றாக வேகவைத்து, அதன் பிறகு பிரஷர் குக்கரில் போட்டு வெங்காயம், மஞ்சள் பொடி, பச்சை மிளகாய், உப்பு மற்றும் சிறிதளவு ஆம்சூர் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பனீர் மற்றும் கீரை சூப்

பனீர் மற்றும் கீரை சூப் உடல் எடையைக் குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இதில் புரதம், இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இதனால், இந்த சூப் எடை குறைப்புக்கு மிகவும் உதவும். 

பட்டாணி மற்றும் கேரட் சூப் உடல் எடையை குறைக்கும்

பட்டாணி மற்றும் கேரட் சூப் உடல் எடையை குறைக்க உதவும். கேரட்டில் வைட்டமின்-ஏ உள்ளது. இது கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனுடன், பட்டாணியில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு ஆகியவை அதிகமாக உள்ளன. அவை ஆரோக்கியம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இதனுடன், எடையைக் குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தொந்தியை குறைக்க எளிய பானம் இருக்கும்போது கவலை எதற்கு 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News