தொப்பை குறைய, கொழுப்பு கரைய.. இந்த கருப்பு உணவுகளை சாப்பிட்டால் போதும்: ட்ரை பண்ணுங்க!!

Black Foods for Weight Loss: பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், நாம் சில கருமையான உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால், எடை வேகமாக குறையும் என்று கூறுகிறார். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 10, 2023, 11:56 AM IST
  • ஜிம்மில் மணிக்கணக்கில் வியர்வை சிந்துவது என்பது இந்த காலத்தில் அனைவராலும் முடியாத ஒரு விஷயமாக உள்ளது.
  • இது தவிர, உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி டயட்டில் இருப்பதும் அவ்வளவு எளிதானது அல்ல.
  • ஆனால் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எடையை எளிதாக கட்டுப்படுத்தலாம்
தொப்பை குறைய, கொழுப்பு கரைய.. இந்த கருப்பு உணவுகளை சாப்பிட்டால் போதும்: ட்ரை பண்ணுங்க!! title=

எடை இழப்புக்கான உணவு: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு நோயாக மாறி வருகிறது. உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிகை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் உடல் பருமனால் மக்கள் பல வித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். உடல் பருமன் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் தைராய்டு போன்ற நோய்களுக்கு உடல் பருமன் காரணமாகும். உடல் பருமனை கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு வகையான முயற்சிகளை எடுக்கின்றனர். 

உடல் எடையை குறைக்கும் உணவுகள்

உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமான பணியாகும், இதற்காக கடுமையான உடற்பயிற்சிகளையும் கடுமையான உணவு முறைகளையும் பின்பற்ற வேண்டும். அன்றாட வேலைகளில் இருந்து நேரத்தை ஒதுக்கி, ஜிம்மில் மணிக்கணக்கில் வியர்வை சிந்துவது என்பது இந்த காலத்தில் அனைவராலும் முடியாத ஒரு விஷயமாக உள்ளது. இது தவிர, உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி டயட்டில் இருப்பதும் அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எடையை எளிதாக கட்டுப்படுத்தலாம். குறிப்பாக சிலவற்றை சாப்பிடுவதன் மூலம் எடையை குறைக்க முடியும். இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், நாம் சில கருமையான உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால், எடை வேகமாக குறையும் என்று கூறுகிறார். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

உடல் எடையை குறைக்க இந்த கருப்பு பொருட்களை உட்கொள்ளுங்கள்:

1. கருப்பு பூண்டு

பூண்டு நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஏனெனில் இது பெரும்பாலான காய்கறிகளை சமைக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் கருப்பு பூண்டை ருசித்திருக்க மாட்டீர்கள். இதில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், வெள்ளைப் பூண்டை விட இரண்டு மடங்கு வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் காணப்படுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனை குறைக்கிறது.

மேலும் படிக்க | நரை முடிக்கு தீர்வு இந்த 3 ஆயுர்வேத வைத்தியம் தான்.. உடனே ட்ரை பண்ணுங்க

2. கருப்பு அரிசி

நீங்கள் வெள்ளை மற்றும் பழுப்பு அரிசியை பல முறை சாப்பிட்டிருக்க வேண்டும், ஆனால் எப்போதாவது கருப்பு அரிசியை முயற்சித்திருக்கிறீர்களா? இது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் அவற்றில் அந்தோசயனின்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளன. கறுப்பு அரிசியில் இருக்கும் நார்ச்சத்து, எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கும்.

3. கருப்பு தேநீர்

பால் மற்றும் சர்க்கரையால் தயாரிக்கப்படும் சாதாரண டீயில் நிறைய குறைபாடுகள் உள்ளன. உடல் எடையை குறைக்க விரும்பினால் அதற்கு பதிலாக, நீங்கள் கருப்பு தேநீரை உட்கொள்ள வேண்டும். அதில் உள்ள பாலிபினால்கள் செல் சேதத்தை குறைக்கிறது. இது கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. மேலும் உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது.

4. கருப்பு பெர்ரி 

கருப்பு பெர்ரியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த கருப்பு நிற பழத்தால் அதிகரிக்கும் எடை குறையும். இது தவிர, இதனால் உடல் பருமனிலிருந்தும் நிவாரணம் காணலாம். மேலும் சருமத்தையும் இது அழகாக்குகிறது.

(பொற்ப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மேல் வயிறு தொப்பை இருக்கின்றதா? அப்போ இரவில் இந்த உணவு பொருட்களை சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News