Sukran Peyarchi Palangal: டிசம்பர் மாதம் 2 முறை சுக்கிரன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கத்தால் டிசம்பர் மாதம் முழுவதும் அமோக பலன்களை பெறவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இவற்றால் சுப விளைவுகளும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் இருக்கும். டிசப்மர் மாதத்தில் சுக்கிரன் 2 முறை பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
செல்வம், ஆடம்பரம், செழிப்பு, அழகு, ஈர்ப்பு, காதல், பாலியல் இன்பம், வசீகரமான ஆளுமை போன்றவற்றின் அதிபதியாக இருப்பவர் சுக்கிரன். அவர் மாற்றங்களை மேற்கொள்ளும் போதெல்லாம், மனிதர்களின் வாழ்வில் இந்த அம்சங்களிலும் மாற்றம் ஏற்படும்.
டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி மதியம் 12:05 மணிக்கு, சுக்கிரன் தனுசு ராசியிலிருந்து விலகி மகர ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். அதே மாதம் அதாவது டிசம்பர் 28ஆம் தேதி அவர் மீண்டும் கும்ப ராசியில் பெயர்ச்சியாவார். டிசம்பரில் இரண்டு முறை சுக்கிரன் பெயர்ச்சி நடப்பது விசேஷமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
டிசம்பர் மாதத்தில் 2 முறை நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும். சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு இது அதிர்ஷ்டக் காலமாக இருக்கும். அவர்களின் வாழ்க்கையில் ஏராளமான பணமும், அன்பும், மகிழ்ச்சியும் வந்து சேரும். சுக்கிரனின் அருளால் பண மழையில் நனையப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்: டிசம்பரில் இரண்டு முறை நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வித நன்மைகளை அளிக்கும். இந்த ராசிக்காரர்கள் சுக்கிரனின் இரட்டைப் பெயர்ச்சியின் போது மிகுந்த நம்பிக்கையுடனும் நேர்மறையாகவும் இருப்பார்கள். இவர்களது கவர்ச்சியான ஆளுமை மற்றும் வசீகரம் அதிகரிக்கும். வாழ்வின் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். முதலாளியுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். சக ஊழியர்களின் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும்.
மிதுனம்: டிசம்பர் மாதத்தில் நடக்கவுள்ள 2 சுக்கிரன் பெயர்ச்சிகளின் தாக்கத்தால் இந்த காலம் மிதுன ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளின் நம்பிக்கை மற்றும் ஊக்கத்தைப் பெறுவீர்கள். சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்பு உள்ளது. நிதி ஆதாயத்திற்கான புதிய வாய்ப்புகள் அமையும். எழுத்து, பேச்சு அல்லது சந்தைப்படுத்தல் தொடர்பான துறைகளில் உள்ளவர்கள் அதிக வெற்றி பெறுவார்கள். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். வியாபார சந்திப்புகள் வெற்றி பெறும். புதிய வாடிக்கையாளர்களை சந்திப்பீர்கள். லாபம் அதிகரிக்கும்
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மகிழ்ச்சியான பொழுதை அளிக்கும். இந்த காலகட்டத்தில் மிகுந்த விழிப்புணர்வோடு, தீர்க்கமாக செயல்படுவார்கள். உங்கள் ஆற்றலைச் சரியாகப் பயன்படுத்தி அதன் மூலம் வாழ்க்கையில் புதிய உயரங்களைத் தொடும் வாய்ப்பு கிடைகும். உத்தியோகத்தில் ஸ்திரத்தன்மை இருக்கும். மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் ஸ்திரத்தன்மை இருக்கும். பழைய வாடிக்கையாளர்களால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
விருச்சிகம்: சுக்கிர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இருக்கும். இது எதிர்பாராத பண ஆதாயத்திற்கான நேரமாக இருக்கலாம். சில நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் இனிதே நிறைவேறும். காதல் வாழ்க்கையில் புதிய உற்சாகம் உண்டாகும். திருமணத்திற்காக காத்திருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமானவர்களிடையே அன்பும், காதலும் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவுகள் வலுவடையும்.
மகரம்: சுக்கிரம் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். இந்த பணத்தின் மூலம் உங்கள் நிதி நிலையை பலப்படுத்தலாம். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். சமூக வட்டம் அதிகரிக்கும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். சமூகத்தில் மதிப்ப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுப்பெறும். மனநலம் நன்றாக இருக்கும். மன அழுத்தம் குறையும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சி தாக்கத்தால் வியாபாரத்தில் அதிக லாபம் அடைவார்கள். வீட்டில் சில சுப காரியங்கள் நடக்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் நடந்துமுடியும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் அமையும். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையிடம் நம்பிக்கை அதிகரிக்கும். உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது உங்கள் ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.