SIP, அதாவது சிஸ்டமேடிக் இஸ்ட்மெண்ட் பிளான் என்னும் முறையான முதலீட்டுத் திட்டம், பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த வழியாகும். இதன் மூலம், வருமானம் அதிகம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியத்தில் மாதத்தோறும், தினசரி, வாரம் தோறு மற்றும் காலாண்டு அடிப்படையில் என குறிப்பிட்ட ஒரு தொகையை முதலீடு செய்யலாம். SIP முதலீட்டின் மூலம் கூட்டு வட்டி போன்ற வருமானம் கிடைப்பதால், பணம் பன்மடங்காக அதிகரிக்கிறது.
மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டரைப் பயன்படுத்தி தினமும் ரூ.167 முதலீடு செய்தால் எத்தனை காலங்களில் 5 கோடி ரூபாயை சேமிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
உங்கள் வருவாயில் ஒரு பகுதியை உங்கள் எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்பினால், மியூச்சுவல் ஃபண்ட் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். SIP மூலம் உங்கள் முதலீட்டிற்கான சிறந்த பலனைப் பெறலாம். பங்கு சந்தையை ஒப்பிடும் போது, இதில் ஆபத்து குறைவு. SIP முதலீட்டுத் திட்டத்தின் மூலம் தினம் ரூ.167 முதலீடு செய்தால் 25 ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம் என்கின்றனர் நிபுணர்கள். முதலீட்டு திட்டம் என்ன, அதன் கணக்கீடு என்ன என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
புதிய முதலீட்டாளர்கள் அனைவருக்கும் எஸ்ஐபி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். பங்குச் சந்தையைப் போல அதிக ரிஸ்க் கொண்டதில்லை என்பதாலும், வருமானமும் நன்றாக இருக்கும் என்பதாலும், பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று SIP மற்றும் மற்றொன்று மொத்த தொகையை முதலீடு செய்வது. இந்நிலையில், SIP மூலம் தினசரி ரூ.167 என்ற அளவில், அதாவது மாதம் ரூ.5000 முதலீடு செய்வதன் மூலம் ரூ.5 கோடிக்கு உரிமையாளராகிவிடுவீர்கள்.
தினசரி ரூ 167, அதாவது மாதம் ரூ.5000 முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் ரூ 5 கோடிக்கு உரிமையாளராக மாற எத்தனை கால, ஆகும் என்ற கணக்கீட்டினை அறிந்து கொள்வோம். பரஸ்பர நிதிய முதலீடுகளில், சராசரியாக 12 - 15% சதவிகித வருமானம் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், பல சமயங்களில், 20% முதல் 30% வரை கூட வருமானத்தை வழங்கியுள்ளன. இதன் மூலம் 25 வயதில் முதலீட்டை தொடங்கினால், 50வது வயதில் ரூ.5 கோடி உங்கள் கையில் இருக்கும்.
மியூச்சுவல் ஃபண்டில் ஒரு நாளைக்கு ரூ.167 வீதம் 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5000 எஸ்ஐபி முதலீடு செய்து வரும் நிலையில், ஆண்டுதோறும் வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க, முதலீட்டுத் தொகையை 15 சதவிகிதம் அதிகரித்து முதலீடு செய்து வந்தால், 25 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ. 1,27,67,581 ஆகவும், அதில் 15 சதவிகிதம் வருமானம் கிடைக்கும் என கணக்கில் கொண்டால், அதன் வருமானம் ரூ. 3,94,47,362 ஆகவும் இருக்கும். முதலீடு மற்றும் வருமானம் இரண்டும் இதில் சேர்க்கப்பட வேண்டும். அது சுமார் ரூ.5.22 கோடியாக இருக்கும், மேலும் 25 ஆண்டுகளில் ரூ.5 கோடிக்கும் அதிகமான சொத்துக்கு நீங்கள் சொந்தக்காரராகிவிடுவீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ