ஜியோ, ஏர்டெல் பின்னடைவுக்கு... இந்த 2 ரீசார்ஜ் திட்டங்களே காரணம் - மாஸ் காட்டும் BSNL

BSNL Successful Recharge Plans: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 2 ரீசார்ஜ் திட்டங்கள்தான் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவற்றை பின்னடைவு அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 27, 2024, 09:07 PM IST
  • 1 கோடி வாடிக்கையாளர்களை 3 முன்னணி நிறுவனங்கள் இழந்துள்ளன.
  • பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • பிஎஸ்என்எல் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
ஜியோ, ஏர்டெல் பின்னடைவுக்கு... இந்த 2 ரீசார்ஜ் திட்டங்களே காரணம் - மாஸ் காட்டும் BSNL title=

BSNL Successful Recharge Plans: பிஎஸ்என்எல் நிறுவனம் எப்போதுமே அதன் மலிவான ரீசார்ஜ் திட்டங்களுக்கு பெயர் பெற்றவை. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் வரம்பற்ற மொபைல் காலிங் மற்றும் டேட்டா பலன்களை வழங்குகின்றன. குறைந்த விலையில் நிறைவான சேவை கிடைப்பதால் பலரும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் பக்கம் தாவி உள்ளனர்.

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியதால் சமீப காலத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் தெரிந்துகொள்ள முடிந்தது. 

அதிரடி காட்டும் பிஎஸ்என்எல்

அதே நேரத்தில் தற்போது பிஎஸ்என்எல் மலிவான விலையில் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குவது மட்டுமின்றி தரமான நெட்வொர்க் சேவையும் அளிப்பதால் பலரும் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறியுள்ளனர். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சமீபத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 4ஜி மொபைல் டவர்களை நாடு முழுவதும் அமைத்தது. இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டவர்கள் செயல்பட தொடங்கியுள்ளன. பிஎஸ்என்எல் மேலும் 50,000 டவர்களை வரும் மாதங்களில் நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது, இதன் மூலம் நாடு முழுவதும் 4ஜி சேவையை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முழுமையாக விரிவுப்படுத்தப்படும் என தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஏர்டெல் வழங்கும் பட்ஜெட் பிளான்... தினசரி 3ஜிபி டேட்டாவுடன்... அமேசான் பிரைம் இலவசம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களில் முதன்மையானது ரூ. 999 திட்டமாகும். இதில் 200 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. மேலும் நீங்கள் இந்தியாவிற்குள் எந்த நெட்வொர்க்கிற்கு கால் செய்தாலும் வரம்பற்ற வாய்ஸ் காலிங் வசதி கிடைக்கும். இதன்மூலம், அதிகம் போன் பேசும் தேவையுள்ளவர்கள் இந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பார்கள். இருப்பிடம் இந்த திட்டத்தில் இலவச டேட்டாக்கள் வழங்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புயலை வீசும் இந்த 2 திட்டங்கள்

அதேபோல இதில் இருந்து சிறிது வித்தியாசங்களை கொண்ட 997 ரூபாய் ரீசார்ஜ் திட்டமும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடம் அதிகம் பிரபலமானதாகும். இதுவும் வரம்பற்ற காலிங் வசதியை வழங்குகிறது, கூடவே ஒரு நாளைக்கு இரண்டு ஜிபி அதிவேக டேட்டாவையும் வழங்குகிறது. கூடுதலாக 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது. 

இதன் வேலிடிட்டி 160 நாட்களாகும். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் அதிலும் குறிப்பாக வாய்ஸ் காலிங் மற்றும் டேட்டா வசதியை அதிகமாக வேண்டுபவர்களுக்கு இந்த ரிசார்ஜ் திட்டமும் மிகவும் கை கொடுக்கிறது. இது போன்று நீண்ட நாட்கள் வேலிடியுடன் நன்மைகளை அளிக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களிலும் இல்லை எனலாம். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் மட்டுமே இருக்கிறது.

இதன்மூலமே, இந்த 200 நாள்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டம் என்பது தொலைத்தொடர்பு துறையில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது எனலாம். பிஎஸ்என்எல் 4ஜி சேவையை விரிவுப்படுத்தி, அடுத்து 5ஜி சேவைக்குள் நுழைந்தால் நிச்சயம் பெருவாரியான வாடிக்கையாளர்களை சென்றடையலாம் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஏர்டெல் 90 நாள் ரீசார்ஜ் திட்டம்... 135ஜிபி டேட்டா உடன் OTT பலன்கள்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News