'ஒருமித்த கருத்து...' தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு உறுதியானது விவாகரத்து... தீர்ப்பளித்தார் நீதிபதி!

Dhanush Aishwarya Officially Divorced: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு இடையே இருவரின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிபதி சுபாதேவி இன்று (நவ. 27) தீர்ப்பளித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 27, 2024, 08:10 PM IST
  • இருவருக்கும் 2004இல் திருமணம் நடந்தது.
  • 2022இல் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
  • தற்போது இந்த திருமணம் செல்லாது என தீர்ப்பு.
'ஒருமித்த கருத்து...' தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு உறுதியானது விவாகரத்து... தீர்ப்பளித்தார் நீதிபதி! title=

Dhanush Aishwarya Divorce Verdict: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷ் இடையே இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. சுமார் 18 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த தம்பதி, கடந்த 2022ஆம் ஆண்டு இருவரும் அவரவர் X பக்கத்தின் மூலம் தாங்கள் பிரிந்துவிட்டதாக பதிவிட்டு பொதுவெளியில் அறிவித்தனர்.

தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்னையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் வகையில் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷ் - ஐஸ்வர்யா

அதில் 2004ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கின் விசாரணைக்கு
தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் 3 முறை ஆஜராகாமல் இருந்தனர். 

மேலும் படிக்க | கீர்த்தி சுரேஷ் 15 வருட காதலுக்கு டும் டும் டும்... மாப்பிள்ளை ரெடி பொண்ணு ரெடி!!

அந்த வகையில், இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன்பு நவ.21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் நீதிபதி சுபாதேவி முன்னிலையில் ஆஜராகினர். அப்போது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் கெளதம் S ராமன் என்பவரும், ஐஸ்வர்யா தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதி ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் வழக்கு தொடர்பாக முடிவெடுக்க நீதிபதி அறிவுறுத்தினார்.

சிறிது நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், தாங்கள் பிரிந்து வாழவே விரும்புவதாக நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் நீதிபதியிடம் உறுதியாக தெரிவித்தனர். இதுதொடர்பாக இரு தரப்பினரிடமும் கையெழுத்து பெற்ற பின், வழக்கில் வரும் நவம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். 

ஒருமித்த கருத்தின் அடிப்படையில்...

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி இன்று அறிவித்தார். இருவரின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார். இருப்பினும், இந்த தீர்ப்பின் முழு விவரம் இன்னும் வெளியாகாத நிலையில், இதில் ஜீவனாம்சம் சார்ந்தும், அவர்களின் இரு மகன்கள் குறித்தும் தீர்ப்பில் ஏதாவது குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை பொறுத்திருந்து காணலாம். 

மேலும் படிக்க | வழக்கு போட்ட தனுஷ்... நயன்தாராவுக்கு நெருக்கடி - சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News