Weight Loss: என்ன பண்ணாலும் எடை குறையலையா? இதை சாப்பிடுங்க போதும்

Weight Loss Tips: நாம் அன்றாடம் உட்கொள்ளும் சில உணவுகளிலேயே உடல் எடையை குறைப்பதற்கான கூறுகள் அடங்கியுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 28, 2023, 07:16 PM IST
  • உடல் எடை அதிகரிப்பதால் பலர் கவலையில் உள்ளனர்.
  • உடல் எடையை குறைக்கும் மேஜிக் இதுதான்.
  • உடல் எடையை குறைக்கும் சில டிப்ஸ்களை இங்கே காணலாம்.
Weight Loss: என்ன பண்ணாலும் எடை குறையலையா? இதை சாப்பிடுங்க போதும் title=

Weight Loss Tips: இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள மக்கள் உடல் எடை அதிகரிப்பதால் கவலையில் உள்ளனர். உடல் பருமன் பல நாடுகளில் கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது. இன்றைய பிஸியான வாழ்க்கையில், நம்மை நாமே சரியாகக் கவனித்துக் கொள்ள முடிவதில்லை, இதனால் வயிறு மற்றும் இடுப்பில் கொழுப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. உடல் எடையை குறைக்க, பலர் ஜிம் செல்கிறார்கள். ஆனால், ஜிம்மிற்குச் செல்வது அல்லது சில உடல் செயல்பாடுகளைச் செய்வது மட்டும் இதற்கு போதாது. உங்கள் உணவைக் கட்டுப்படுத்தாமல், ஆரோக்கியமான பொருட்களை உட்கொள்ளாமல் இருந்தால், இதற்காக நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். 

உடல் எடையை குறைக்கும் மேஜிக்

நாம் அன்றாடம் உட்கொள்ளும் சில உணவுகளிலேயே உடல் எடையை குறைப்பதற்கான கூறுகள் அடங்கியுள்ளன. இவற்றை சரியான அளவில் சரியான முறையில் உட்கொண்டால் நிச்சயமாக உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம், தொப்பையை குறைக்கலா (Belly Fat Reduction). உடல் எடையை குறைக்க நீங்கள் என்ன சாப்பிட வேண்டும்? உடல் எடையை குறைக்கும் சில டிப்ஸ்களை (Weight Loss Tips) இங்கே காணலாம். 

1. சூப் குடிக்கவும்  (Soup)

இந்தியாவில், திரவ உணவிற்கு பதிலாக திட உணவை சாப்பிடும் பழக்கமே அதிகமாக உள்ளது. அதிக அளவில் திரவ உணவை உட்கொள்வதால் செரிமானம் தாமதமாகிறது. இதனால் எடையும் அதிகரிக்கிறது, இதற்கு பதிலாக, முடிந்தவரை சூப் குடிக்கலாம். இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கும் மற்றும் செரிமானமும் நன்றாக இருக்கும். எடை இழக்கும் முயற்சியில் இதனால் நல்ல பலன் கிடைக்கும். 

2. முள்ளங்கி  (Radish)

முள்ளங்கி பொதுவாக குளிர்காலத்தில் வளர்க்கப்படும் ஒரு தாவரமாகும். இந்த பருவத்தில், மனித உடலின் செயல்பாடு குறைகிறது. இதனால் எடை அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. ஆகையால், இந்த காலத்தில் முள்ளங்கியை சாப்பிடுவது நன்மை பயக்கும். இது குறைந்த கலோரி உணவாகும். இது கொழுப்பை அதிகரிக்காது, ஆகையால் உடல் எடையை பராமரிக்க உதவும்.

மேலும் படிக்க | Lungs Detox: நுரையீரலை சுத்தம் செய்ய கடைபிடிக்க வேண்டியவை!

3. சர்க்கரை வெள்ளிக்கிழங்கு  (Sweet Potato)
சர்க்கரை வெள்ளிக்கிழங்கு  நிலத்தில் விளையும் ஒரு சிறந்த உணவாகும். இதை தினமும் சாப்பிட்டால்  வயிற்றில் நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதன் காரணமாக, தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. இது தவிர, இனிப்பு சர்க்கரை வெள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தும் எடை இழப்பிற்கு உதவுகிறது. 

4. சிட்ரஸ் உணவுகள் (Citrus Foods)
எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் டேன்ஜரைன்கள்  (Tangerines) ஆகியவற்றில் பொதுவாக வைட்டமின் சி அதிகமாக காணப்படுகின்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. இவை உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே அவற்றை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | உச்சி முதல் பாதம் வரை: ஆளி விதைகளில் அற்புத நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News