ஓவரா வெயிட் போடுதா? ரோஸ் டீ குடிங்க, சீக்கிரமே எடை குறையும்!!

Rose Tea: ரோஸ் டீ உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, மன அழுத்த எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு மற்றும் கால்சியம் போன்ற பண்புகள் ரோஜா இதழ்களில் உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2023, 06:45 PM IST
  • செரிமான பிரச்சனை மிகவும் பொதுவான ஒரு பிரச்சனையாக உள்ளது.
  • உங்கள் செரிமான அமைப்பு பலவீனமாக இருந்தால், நீங்கள் ரோஸ் டீயை உட்கொள்ளலாம்.
  • ரோஸ் டீ செரிமான மண்டலத்தில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கவும், மலச்சிக்கலைப் போக்கவும், எடையைக் குறைக்கவும் உதவும்.
ஓவரா வெயிட் போடுதா? ரோஸ் டீ குடிங்க, சீக்கிரமே எடை குறையும்!! title=

உடல் எடையை குறைக்க ரோஸ் டீ: ரோஜாப்பூ ஒரு மிக அழகான பிரபலமான பூவாகும். இதை சமையலிலும் பயன்படுத்துகிறோம். இது இனிப்புகளில் அலங்கரிப்பதில் இருந்து குல்கந்த் தயாரிப்பதற்கும், அழகை மேம்படுத்துவதற்கும், உலர்ந்த இதழ்களிலிருந்து ரோஜா செர்பட் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ரோஸ் டீ குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. 

ரோஸ் டீ உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, மன அழுத்த எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு மற்றும் கால்சியம் போன்ற பண்புகள் ரோஜா இதழ்களில் உள்ளன. இது உடலுக்கு பல நன்மைகளை வழங்க உதவும்.

ரோஸ் டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

1. வீக்கம்:

ரோஜாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ரோஸ் டீயை தினமும் உட்கொள்வது உடல் எடையை குறைப்பதோடு, உடலின் வீக்கத்தையும் குறைக்க உதவும்.

மேலும் படிக்க |  நீரிழிவு நோயை ஓட விரட்டும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்!

2. பசியைக் குறைக்க:

உங்களுக்கும் பசி அதிகமாக இருக்கிறதா? நீங்கள் அதிகமாக சாப்பிடுவதன் காரணமாக உங்கள் எடை அதிகரித்தால், ரோஸ் டீ அருந்துவது அதில் உங்களுக்கு நன்மை பயக்கும். ரோஸ் டீ பசியைக் கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவும்.

3. செரிமானம்:

குளிர்காலத்தில் செரிமான பிரச்சனை மிகவும் பொதுவான ஒரு பிரச்சனையாக உள்ளது. உங்கள் செரிமான அமைப்பு பலவீனமாக இருந்தால், நீங்கள் ரோஸ் டீயை உட்கொள்ளலாம். ரோஸ் டீ செரிமான மண்டலத்தில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கவும், மலச்சிக்கலைப் போக்கவும், எடையைக் குறைக்கவும் உதவும்.

4. நச்சுகள்:

தினமும் ரோஸ் டீ உட்கொள்வது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். இது சிறுநீர் தொற்றுநோயைத் தவிர்க்கவும், உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை எரிக்கவும் உதவும்.

5. நோய் எதிர்ப்பு சக்தி

ரோஜாவில் வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது என்று கருதப்படுகிறது. ரோஸ் டீயை தினமும் சாப்பிட்டு வந்தால், அது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.

வீட்டில் ரோஸ் டீ செய்வது எப்படி:
- ரோஜா தேநீர் தயாரிக்க உலர்ந்த மற்றும் புதிய இதழ்கள் இரண்டையும் பயன்படுத்தலாம்.

- நீங்கள் புதிய இதழ்களை எடுத்துக் கொண்டால், முதலில் அவற்றை சுத்தமான தண்ணீரில் கழுவவும்.

- இதற்குப் பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். இப்போது தண்ணீர் கொதித்ததும், அடுப்பை அணைத்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.

- பிறகு வடிகட்டி தேன் கலந்து சாப்பிடவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுகர் எக்கச்சக்கமா ஏறுதா? இந்த 5 உணவுகளை கண்டிப்பா சாப்பிடுங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News