உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் முட்டை: உடல் எடை அதிகரிப்பதால் நாம் பலவித பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். பலரும் உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். எனினும், மிகச்சிலருக்கே இந்த முயற்சிகளால் பலன் கிடைக்கின்றன. உடல் எடையை குறைக்க இயற்கையான பல வழிகள் உள்ளன. மருந்து மாத்திரைகளை நாடாமல், இயற்கையான வழிகள், முறையான உணவு முறை, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் உடல் எடையை குறைக்க முயல்வது எப்போதும் நல்லதாக கருதப்படுகின்றது.
உடல் எடையை குறைக்க முட்டை நமக்கு பெரிய அளவில் உதவும். முட்டை புரதத்தின் நல்ல ஆதாரமாக கருதப்படுகிறது. இதனுடன், முட்டையில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் சிறிய அளவில் காணப்படுகின்றன. உணவில் முட்டைகளை சேர்த்துக்கொள்வது உடல் எடையை குறைப்பதை எளிதாக்குகிறது என்று சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர். இதனுடன், தசைகளை வளர்ப்பதில் இது நன்மை பயக்கும். உடல் எடையை குறைக்க முட்டையை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முட்டையின் நன்மைகள்
முட்டையில் தாதுக்கள், வைட்டமின்கள், செலினியம் மற்றும் கோலின் ஆகியவை நிறைந்துள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. முட்டையை உட்கொள்வதால், நாம் நாள் முழுவதும் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். முட்டையின் முறையான டயட் உடல் எடையை குறைப்பதில் பெரிதும் உதவியாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் இதை மட்டும் செய்தால் போதும்
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வேகவைத்த முட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது கூடுதல் கொழுப்பைக் குறைக்கிறது. முட்டையின் வெள்ளைக்கரு எடை குறைக்க உதவுகிறது. ஜிம்மிற்கு செல்வோருக்கு முட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கருமிளகு பொடியுடன் முட்டையை சாப்பிடுங்கள்
கருப்பு மிளகு ஒவ்வொரு வீட்டிலும் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கருப்பு மிளகு தூளை முட்டையுடன் சேர்த்து உட்கொள்வது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. ஏனெனில் கருப்பு மிளகு ஒரு வகையான உஷ்ன மசாலா ஆகும். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது, செரிமான பிரச்சனையை நீக்குகிறது.
இதனுடன், உடலில் எந்த விதமான கூடுதல் கொழுப்பும் சேர இது அனுமதிக்காது. முட்டை ஆம்லெட்டில் கருப்பு மிளகு தூளையும் பயன்படுத்தலாம். இது கொழுப்பு எரியும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்கணுமா? இந்த 4 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ