ஒரே வாரத்தில் உடல் எடை குறைய இந்த டயட் சார்ட் ஃபாலோ பண்ணுங்க.. அசந்து போயிடுவீங்க

Weight Loss: 7 நாட்களில் அதாவது ஒரு வாரத்தில் ஸ்லிமான, டிரிம்மான உடல் வாகை பெற நீங்கள் தொடர்ந்து பின்பற்றக்கூடிய ஒரு சிறப்பு உணவு அட்டவணையை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 23, 2023, 01:42 PM IST
  • எடை இழப்புக்கான காலை உணவு.
  • எடை இழக்க ஆண்களுக்கான உணவு அட்டவணை.
  • உடல் எடையை குறைக்க பெண்கள் என்ன சாப்பிட வேண்டும்?
ஒரே வாரத்தில் உடல் எடை குறைய இந்த டயட் சார்ட் ஃபாலோ பண்ணுங்க.. அசந்து போயிடுவீங்க title=

எடை இழப்பு குறிப்புகள்: உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் கண்டிப்பாக சரியான அளவில் தேவை. அதேபோல், குறைந்த அளவு கலோரி உட்கொள்ளலும் உடலுக்கு அவசியம். நாம் நாள் முழுவதும் கலோரி நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை சேமித்து வைக்கிறது. மேலும் நாள் முழுவதும் எவ்வளவு கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவு கலோரிகளை நாம் எரிக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யாவிட்டால், கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பு வடிவில் சேமிக்கப்படும். இதன் காரணமாக உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகின்றது. அதே போல் உடல் பருமன் பல்வேறு வாழ்க்கை முறை கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

உடல் பருமன் மற்றும் அதிக எடை நமது உடல் தோற்றத்தை கெடுக்கும். உடல் பருமனை குறைக்கவும், விரைவாக உடல் எடையை குறைக்கவும் மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், பெரும்பாலும் இவற்றால் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் ஏற்படுவதில்லை. உங்கள் உணவுமுறையில் சில மாற்றங்களை செய்வதால் உடல் எடையை குறைக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். 7 நாட்களில் அதாவது ஒரு வாரத்தில் ஸ்லிமான, டிரிம்மான உடல் வாகை பெற நீங்கள் தொடர்ந்து பின்பற்றக்கூடிய ஒரு சிறப்பு உணவு அட்டவணையை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த அட்டவணையை பின்பற்றினால் உடல் எடை வேகமாக குறைவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் உங்களை முழுமையாக கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடியும். 

7 நாட்களில் எடையை இழக்க இந்த உணவு அட்டவணையைப் பின்பற்றவும்

காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும். மற்றொரு முக்கியமான விஷயத்தையும் நினைவில் கொள்ளுங்கள், எலுமிச்சையை தேனுடன் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் வெந்நீருடன் வைட்டமின் சி உட்கொள்வதால் தசைகள் பலவீனமடைகின்றன.
 
மேலும் படிக்க | உடல் சூடு வதைக்கிறதா? அப்போ வெண் பூசணி சாப்பிடுங்க..!

எடை இழப்புக்கான காலை உணவு

எப்போதும் லேசான காலை உணவை உட்கொள்ளுங்கள். காலை உணவாக ஓட்ஸ் அல்லது இரண்டு ரொட்டிகள் மற்றும் ஒரு கிண்ணம் தால் அல்லது 2 இட்லி, 2 தோசை, ஒரு கப் உப்புமா ஆகியவற்றை சாப்பிடலாம். பருப்பு வகைகளில் புரதம் நல்ல அளவில் காணப்படுவதோடு தசைகளை இது வலுப்படுத்துகிறது. காலை உணவுக்கு ஒரு மணி நேரம் கழித்து, நீங்கள் ஆப்பிள் அல்லது வாழைப்பழம் சாப்பிடலாம். காலை உணவில் முட்டை, பால் அல்லது பிற ஊட்டச்சத்துக்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
 
எடை இழக்க ஆண்களுக்கான உணவு அட்டவணை

முதலில் இரண்டு மணிக்குள் மதிய உணவை உட்கொண்டு விடுங்கள். மதிய உணவில் அரிசி, பருப்பு, பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவது நன்மை பயக்கும். பழுப்பு அரிசி நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். செரிமான அமைப்பும் சிறப்பாக இருக்கும். வேகவைத்த பச்சை காய்கறிகள் உடல் எடையை வேகமாக குறைக்கும்.
 

உடல் எடையை குறைக்க பெண்கள் என்ன சாப்பிட வேண்டும்

பெண்கள் மதிய உணவுக்கு இரண்டு மணி நேரம் கழித்து முளைகள், கொண்டைக்கடலை மற்றும் பச்சைப்பயறு ஆகியவற்றை உட்கொள்ளலாம். இவற்றை வேகவைத்தோ, சுண்டலாக செய்தோ சாப்பிடலாம். இதன் ருசியை சேர்க்க, இதில் எலுமிச்சை, சாட் மசாலா ஆகியவற்றையும் சேர்க்கலாம். முளைகள் மிக விரைவாக எடையைக் குறைத்து தசைகளை வலுவாக்கும். இவை தசைகளுக்கு நல்ல வடிவத்தை அளிக்கின்றன. 
 
இரவு உணவில் என்ன சாப்பிட வேண்டும்

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இரவில் உணவில் லேசான பொருட்களை உட்கொள்ள வேண்டும். இரவு உணவில் இரண்டு ரொட்டி, வேகவைத்த பருப்பு, பச்சை காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடுங்கள். நீங்கள் அசைவ பிரியர்களாக இருந்தால், இரவு உணவிற்கு வேகவைத்த கோழி மற்றும் முட்டை சாப்பிடலாம். சாப்பிட்ட 1-2 மணி நேரம் கழித்து ஒரு கிளாஸ் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கவும். இது உங்களை நோய்களில் இருந்து பாதுகாக்கும். மேலும் இது உடல் எடையை பராமரிக்கவும் உதவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய சில பழங்கள்! ரிஸ்கே இல்லை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News