வேப்பமரத்தில் மிகவும் நன்மை பயக்கும் இரசாயன மூலக்கூறுகள் நிறைந்துள்ளது. வேப்பமரத்தின் இலைகள், குச்சிகள், பூ, பழம், விதை, பட்டை மற்றும் வேர் வரை அனைத்து பகுதிகளும் நோய்களைக் குணப்படுத்துவதில் பயன்படுத்தப்படுகின்றன. வேம்பு ஆன்டிஆக்ஸிடன்ட்களின் வளமான ஆதாரமாக இருப்பதால், செல்களின் வளர்சிதை மாற்றத்தில் உருவாகும் ஃப்ரீரேடிகல்ஸ் (free radicals) எனப்படும் சமனில்லா மூலக்கூறுகளைத் தடுப்பதற்கான பண்புகளைக் கொண்டுள்ளது. செல்களுக்கிடையே சமிக்ஞைகளைக் கடத்தும் பாதைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கிறது.
மனிதர்களுக்கு ஏற்படும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரம் வேப்ப மரம் ஆகும். வேப்ப மரத்தின் வேர், பட்டை, மரப்பட்டை, மரக்கட்டை, வேப்பங் கொட்டை, வேப்பங்கொட்டையின் மேல் ஓடு ,உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால், வேப்பம் பிசின், வேப்பங்காய் , வேப்பம் பழம், வேப்பம்பூ, வேப்பிலை, வேப்பிலை ஈர்க்கு, வேப்பங் கொழுந்து என வேம்பின் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. இந்த அனைத்து பாகங்களுமே, சித்த வைத்தியம் மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.
வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்கு பயனளிக்கிறது என்றாலும், வேப்ப மரப்பட்டையின் மருத்துவ பயன்கள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | சிறுநீரக கல் முதல் நீரிழிவு நோய் வரை: பிரிஞ்சி இலையின் அட்டகாசமான நன்மைகள்
வேப்பம்பட்டையின் பயன்கள்
வேப்ப மரத்தின் பட்டை துவர்ப்பு தன்மை கொண்டது, இதில் உள்ள ஆண்டிசெப்டிக் காயங்களை ஆற்ற உதவுகிறது.
வேப்ப மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாற்றில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.
சூட்டினால் ஏற்படும் கோளாறுகளை சீர்செய்கிறது.
சோர்வை விரட்டும்
புழுக்களுக்கு சிகிச்சை
காய்ச்சலை கட்டுப்படுத்தும்
பசியின்மைக்கு சிகிச்சையளிக்க வேப்பம்பட்டை பயன்படுகிறது
பற்களை சுத்தம் செய்யும் வேப்பம்பட்டை
பல் ஆரோக்கியத்திற்கு வேம்பு
பல் ஆரோக்கியமாக இருக்க, வேப்ப மரத்தின் ஒரு குச்சியை அதாவது வேப்பங்குச்சியை ஒடித்து அதை மென்று சாப்பிடுவார்கள்; இது ஈறுகளில் இரத்தப்போக்கு, பல் சிதைவு மற்றும் வாய் துர்நாற்றம் என பல பிரச்சனைகளைத் தடுக்கிறது.
வேப்பமரத்தின் பட்டையை இடித்து பொடியாக செய்து பயன்படுத்தப்படுகிறது.
வேப்ப மரப்பட்டை
வேப்ப மரப்பட்டை தோல் நோய்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது. புண்கள் மற்றும் பருக்கள் இருந்தால், வேப்ப மரப்பட்டையை அரைத்து, அதில் சிறிதளவு கற்பூரத்தை சேர்த்து கலந்து, அந்தக் கலவையை புண்கள் மற்றும் பருக்கள் மீது தடவினால், அவை விரைவில் குணமாகும். வேப்ப மரப்பட்டையில் ஏராளமான ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உடல்சூட்டை குறைக்க உதவுகிறது.
அரிப்புக்கு வேப்ப மரப்பட்டை
அரிப்பு பிரச்சனை இருந்தால், வேப்ப மரப்பட்டை மிகவும் பயனுள்ள சிகிச்சையாகும். வேப்ப மரப்பட்டையை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து இந்த நீரில் குளிக்கவும். இதை சில நாட்கள் தொடர்ந்து செய்துவந்தால் அரிப்பு பிரச்சனை குணமாகும்.
காய்ச்சலுக்கு வேப்ப மரப்பட்டை
காய்ச்சல் இருந்தால், வேப்ப மரப்பட்டையை கசாயம் செய்து குடித்துவந்தால், காய்ச்சல் குரையும். வேப்ப மரப்பட்டையை 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக சுண்டும் வரை கொதிக்கவிட்டு, பிறகு ஆறிய பிறகு வடிகட்டி குடிக்கவும். உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதிலும், காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் இந்த வேப்பங்கசாயம் நன்மை பயக்கும்.
காயங்களுக்கு வேப்ப மரப்பட்டை
ஏதேனும் காயம் அல்லது தீக்காயம் ஏற்பட்டால், வேப்ப மரப்பட்டையை அதன் மீது தடவலாம். ஏனெனில் வேப்ப மரப்பட்டையில் கிருமி நாசினிகள் உள்ளன. இது வெளிப்புற தொற்றுநோய்களிலிருந்து காயத்தை குணப்படுத்த உதவுகிறது. இதற்கு வேப்ப மரப்பட்டையை மஞ்சள் அல்லது சந்தனப் பொடியுடன் கலந்து தடவி வரவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கீல்வாதத்திற்கு நிவாரணம் அளிக்கும் டாப் 5 பழங்கள்: மூட்டு வலி தொல்லை இனி இல்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ