உலக இதய தினம் ஆண்டுதோறும் ‘உலக இதய கூட்டமைப்பால்’ (World Health Federation) அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1999 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பிறகு, செப்டம்பர் 29ஆம் தேதியாக மாறியது.
இதயத்தை பாதுகாக்க பொதுவான அறிவுரைகள் : பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் 30 வயதுக்கு மேல் உள்ளோர் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறையும், இதயம் சார்ந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
1 நெஞ்சுவலி என்று மயங்கி விழுபவர்க்கு நாம் செய்யவேண்டிய முதலுதவி என்னென்ன :
# இறுக்கமான அணிந்துயிருக்கும் ஆடைகளைத் தளர்த்த விடவும் .
# ஏற்கெனவே இதய நோயாளியானால் உட்கொண்டுவரும் மருந்தைக் கொடுக்கவும்.
# நிமிடங்களில் வலி குறையாவிட்டால் அவசர மருத்துவ உதவியை அழைக்கவும்.
2 இதயத்தை பாதுகாக்க நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது :
# தினமும் உடற்பயிற்சி ஒரு மணி நேரம் செய்வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்றுயாகும்.
# உடல் பயிற்சி செய்யும் போது உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருக்கும்
# பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்தை பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும். உணவில் அதிகம் கவனம் தேவை
# மனஅழுத்தம் ஏற்படும் போது அதை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் நல்லது.
3 மாரடைப்புக்கு முன்பு ஏற்படும் அறிகுறிகள் :
# எந்தவொரு அறிகுறி இல்லாமல் அதிகமாக வியர்வை வெளிவருதால்.
# லேசான நெஞ்சு வலி.
# மூச்சுத்திணறல்.
# பணியில் சோர்வு.
# உடல் வலி,
# சுறுசுறுப்பின்மை
# உடல் குளிர்ச்சியடைதல்.
4 இதயம் சார்ந்த நோய்க்கான அறிகுறிகள் :
# மூச்சுப் பிடித்ததும்.
# வாய்வு தொல்லை.
# குளிர் நிலையில் உள்ள உணவை சாப்பிடுதல்.
# கண்ட கண்ட மருந்துகளை சாப்பிடுவது தவறு.
# மன அழுத்தம்.
# நெஞ்சு வலிமற்றும் நெஞ்சு எரிச்சல்
5 உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவைகள் :
உரிய நேரத்தில் அளவான உணவு எடுத்துக் கொள்ளுவது நல்லது.
'புரோட்டீன்' சத்துள்ள உணவுகளையே அதிகம் எடுத்துக்
ஆவியில் வேக வைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
பிரஷ் காய்கறிகளை சமைத்து சாப்பிடலாம்.
சுத்தமான பழங்களை சாப்பிட வேண்டும்.
பிளாக் சாக்லேட் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
மீன் அதிகம் சாப்பிடலாம்.
6 உணவில் தவிர்க்க வேண்டிய விசயங்கள் :
# மாட்டிறைச்சியில் கொழுப்பு அதிகம் இருப்பாதால் இதய நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாது.
# முறையற்ற உணவுகள் எடுத்துக்கொள்ள கூடாது.
# எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
# அதிகம் ஆல்கஹாலை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
# அதிகம் உப்பு எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
# முட்டை,பால்,இறைச்சி,சமையல் எண்ணெய்,நெய் போன்ற நம் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
7 இதயத்தை பாதுகாக்க நாம் கடைபிடிக்க வேண்டிய விசயங்கள் :
# ரத்த அழுத்த பரிசோதனைகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை செய்து கொள்வதும் நல்லது.
# நோய் முற்றிப்போன நிலை அடையவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
# அதிகமான வேலைப் பளு இருக்கும் பொது மனதை சிறிது ரீலாஸ் கொடுக்க வேண்டும்.
# இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்றுயாகும்.
# நாம் ஓய்வில் இருக்கும் பொழுது நம்முடைய சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் 120-130mmhg-யும்,டயஸ்டாலிக் 70-80mmhg இருக்க வேண்டும்.
# எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் வேண்டும்.
# உங்கள் இதயத்தின் பாதுகாப்பு உங்கள் கையில் உள்ளது என்பதை உணர வேண்டும்.
# எந்த சிக்கலும் இன்றி இதயமும் பாதுகாப்பாக இயங்கும்.
# உரிய நேரத்தில் அளவான உணவுஎடுத்துக்கொள்ள வேண்டும்.
# சரியான உறக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
# காலை, மாலை நடைபயிற்சி செய்வது நல்லது.
ஆரோக்கியமான உணவு,யோகா,தியானத்துடன், உடற்பயிற்சியை தொடர் பயிற்சியாக்கி,சமையலில்POLY UNSATURATED FATTY ACID நிறைந்தஎண்ணெயை உபயோகப்படுத்தினால் இதய நோய் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.
இதற்கு காரணம், வரும்முன் காக்கும் நடைமுறை இல்லாததே. நோய் வந்த பின் வருந்தி பணத்தைக் கொட்டி செலவு செய்வதை விட, வரும் முன் காப்பது நல்லது என்பதை, உணர வேண்டும்.