இன்று உலக புற்றுநோய் தினம்: சில முக்கிய தகவல்கள்

இன்று பிப்ரவரி 4 2020, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது. 

Last Updated : Feb 4, 2020, 10:32 AM IST
இன்று உலக புற்றுநோய் தினம்: சில முக்கிய தகவல்கள் title=

இன்று பிப்ரவரி 4 2020, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது. 

தற்போது உலகளவில் புற்றுநோய் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இது அதிகமாகப் பேசப்படும் ஒரு பயங்கரமான நோயாகவும், மரண பயத்தோடு இணைந்த நோயாகவும் கருதப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். மக்களுக்கு புற்று நோய் குறித்த விழிப்பு உணர்வு இல்லாததே, இதற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். 

புற்றுநோயை குறித்து ஒவ்வொரு வரும் விழிப்புணர்வு பெற்று, மற்றவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் உறுதியேற்போம். புற்றுநோயை குறித்து அரசு பல முகாம் மற்றும் பிரச்சாரம் நடத்தி வருகிறது. 

நம் நாட்டில் தினசரியும் 1300 பேர் புற்றுநோயினால் மரணமடைகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு 11.50 லட்சம் நோயாளிகள் புதிதாக கண்டறியப்பட்டனர். நாடு முழுவதும் 22.50 லட்சம் பேர் புற்றுநோயுடன் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மார்பகப்புற்றுநோய், வாய் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள்தான் நம் நாட்டில் அதிகம் என்கிறது மருத்துவ உலகம்.

புற்றுநோயைப் பொறுத்தவரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம்முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.இதற்கு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது மிகவும் அவசியம். விழிப்புணர்வுநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்களை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதன் மூலம், அடுத்த 10 ஆண்டுகளின் மனிதர்களின் சராசரி ஆயுளை 10 ஆண்டுகள் அதிகரிக்கலாம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பாரம்பரிய உணவுப்பழக்கத்தை நாம் இன்றைக்கு மறந்து விட்டோம். கண்டதை கண்ட நேரத்தில் சாப்பிட்டு நேரங்கெட்ட நேரத்தில் உறங்கி உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை நாம் மாற்றி வைத்து விட்டோம். மோசமான உணவுப் பழக்கம் நிச்சயமாகப் புற்றுநோய் அபயாத்தை அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். சரியான அளவில் பழங்களும் காய்கறிகளும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது பல நோய்களுக்கும் வழிவகுக்கும்.

புற்றுநோயை தடுக்கும் வீட்டிலே எளிய முறைகள்:-

புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது கறிவேப்பிலை. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. 

மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட ப்ராக்கோலி சாப்பிட்டால். இது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.

பப்பாளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால் அதனை உட்கொண்டால் புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம்.

புற்றுநோய் வகைகள்:-

மார்பகப் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய்
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய்
தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்
கர்ப்பப்பை புற்றுநோய்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
கணைய புற்றுநோய்
லிம்போமா
விரைப் புற்றுநோய்
லூக்கீமியா
வயிற்றுப் புற்றுநோய்
மல்டிப்பிள் மைலோமா
மூளைப் புற்றுநோய்
கடைப்பெருங்குடல் புற்றுநோய்
.

Trending News