Tips to make your child's brain sharper: எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே என்ற திரைப்பட பாடல் பலருக்கு தெரிந்திருக்கும். ஆம் இந்த பூமியில் பிறக்கும் எல்லா குழந்தைகளும், ஏதோ ஒரு வகையில் திறன் படைத்தவர்களாக, கள்ளம் கபடம் இல்லாதவர்களாகவே பிறக்கிறார்கள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து, குழந்தைகளை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லும் போது, அவர்கள் சாதனைகளை படைத்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்கிறார்கள். உங்கள் குழந்தையும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கவும், மூளைத்திறன் அபரிமிதமாக இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான உணவு
குழந்தைகளுக்கு, கொடுக்கும் உணவு அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த சரிவிகித உணவாக இருக்க வேண்டும். கூடவே மூளைக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் உணவுகள் டயட்டில் சேர்க்கப்பட வேண்டும். மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடிய, புரதச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியவை நிறைந்த உலர் பழங்கள், மீன் உணவுகள் ஆகியவை தினமும் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வாதுமை பருப்பு பாதாம் போன்றவை, ஞாபக சக்தியை வலுப்படுத்தும் மிகச்சிறந்த உலர் பழங்கள்.
போதுமான தூக்கம்
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் (Health Tips) மன வளர்ச்சிக்கும், போதுமான அளவு ஆழ்ந்த தூக்கம் மிக மிக அவசியம். அப்போதுதான் அவர்களால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். தூக்கமின்மை காரணமாக கவன சிதறல், சோம்பல், எரிச்சல் உணவு ஆகியவற்றை ஏற்படுத்தும். மேலும் குழந்தைகளின் வளர்ச்சிதை மாற்றமும் பாதிப்படையும். இதனால் ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிக்கப்படும்.
மூளைக்கான பயிற்சிகள்
முன்பெல்லாம், குழந்தைகள் வகுப்பில் தவறு செய்யும் போது, ஆசிரியர்கள் அவர்களை தோப்புக்கரணம் போடச் சொல்வதை பார்த்திருக்கலாம். காதுகளைப் பிடித்துக் கொண்டு போடும் தோப்புக்கரணத்தால், மூளை செல்கள் தூண்டப்பட்டு, மூளைக்குப் போகும் ரத்த ஓட்டம் சீராகி, கவனச்சிதறல்கள் நீங்கும். மனம் ஒன்றுபட்டு, நினைவாற்றலும் செயல் திறனும் அதிகரிக்கும். தோப்புக்கரணத்தின் மகிமை உணர்ந்து தான், அவற்றை பிரைன் யோகா என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடற்பயிற்சியும் விளையாட்டும்
இன்றைய போட்டி மிகுந்த காலகட்டத்தில், மாணவர்களுக்கு அழுத்தம் மிக அதிகமாக தான் இருக்கிறது. பெற்றோர்களும் சதா படிப்படி என்று குழந்தைகளை நச்சரிப்பவர்களாகவே இருக்கிறார்கள். விளையாட்டின் நேரத்தை குறைத்துக் கொண்டு படிக்க அதிக நேரம் செலவிடும்படி குழந்தைகள் பிற்படுத்தப்படுகிறார்கள். ஆனால் இது மிகவும் தவறான போக்கு. உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்கள், மூளைக்கு புத்துணர்ச்சியை கொடுத்து, மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். கூடவே யோகா பயிற்சிகளையும் மூச்சுப் பயிற்சிகளையும் மேற்கொள்வது மூளையை திறம்பட செயல்பட வைக்கும். கவனச் சிதறல்கள் என்பதே இருக்காது. இதனால் அவர்கள் படிக்கும் திறன் மேம்பட்டு, குறைவான நேரத்தில், அதிக பாடங்களை புரிந்து கொள்ளும் திறனை பெறுகிறார்கள்.
கலைகளை கற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்குதல்
குழந்தைகளுக்குப் பிடித்த கலைகளை கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துவதால் அவர்கள் மூளை செயல்பாடு பெருமளவு அதிகரிக்கும். பாட்டில் அல்லது வாக்கிய இசைக் கருவிகள் கற்றுக் கொள்ள.ஆர்வம் உள்ள குழந்தைகளை, அதற்கான வகுப்புகளில் சேர்க்க வேண்டும். நடனத்தில் ஆர்வம் இருக்கும் குழந்தைகளுக்கு அதற்கான வாய்ப்பு அளிக்க வேண்டும். இது இரண்டும் இல்லை என்றால் ஓவியம் பிடித்திருந்தால் ஓவியக்கலை ஓவியம் கற்றுக்கொள்ள செய்யலாம். புது மொழிகளை கற்றுக் கொள்வது கூட குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். எனவே வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது, குழந்தையின் மூளை சுறுசுறுப்புடன் இயங்க உதவும்.
சமூகத்தோடு பழகும் தன்மை
இன்றைய போட்டி மிகு உலகில், குழந்தைகளை வெற்றி பெறுவார்கள். அதற்கு அவர்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் உடன் நன்றாக பழகுவதோடு மட்டுமல்லாமல், வெளியில் எல்லோருடனும் நன்றாக பேசி பழக தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு உலகை முழுமையாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் தாங்கள் சந்திக்கும் சோதனைகளை சாதனைகளாக மாற்றும் திறன் அவர்களுக்கு இருக்கும். தன்னம்பிக்கை பிற்பவர்களாக, சாதிக்கும் ஆர்வம் கொண்டவர்களாக குழந்தைகள் வளர சமூகத்தோடு கலந்து பழக நாம் வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால் - என்னென்ன பலன்கள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ