புளி சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும் இதில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..!
அறுசுவைகளில் ஒன்று புளிப்பு சுவை. இதை சரியான அளவில் நமக்கு கொடுக்கும் ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் புளி. சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும் இதில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளி பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆனால், அது மறைக்க முடியாத உண்மை. கோடை காலம் நடந்து கொண்டிருக்கிறது, இந்த பருவத்தில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதற்கு நிறைய செய்கிறார்கள். புளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. புளி சாறு பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம். இது பல நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
READ | கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான முதல் மருந்து... விரைவில் இந்தியாவில்!
- புளியில் காணப்படும் புளிப்பு அமிலம், பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் அதை உட்கொள்ளும் போது, இது அனைத்து வகையான அமைப்புகளையும் நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது.
- புளி சாறு குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, இது நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- புளி சாறு குடிப்பதால் புற்றுநோயும் உண்டாகும் அபாயம் குறைகிறது. நீரிழிவு நோய் உள்ள புளி சாற்றை குடித்து வந்தால் நன்மை பயக்கும்.
- புளி இருக்கும் சில தனித்துவமான கூறுகள் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சி விடுகின்றன, இது நீரிழிவு நோயைக் குறைத்து நோயாளியை நன்றாக உணர வைக்கிறது.
- வெப்ப அழுத்தத்தைத் தவிர்க்க புளி சாறு கூட நல்லது. இதனுடன், இது இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.