இன்றைய காலகட்டத்து இளைஞர்களிடையே அதிகமாக காணப்படும் நோய்களில் ஒன்றாக தைராய்டு புற்றுநோய் இருக்கிறது, அதிலும் குறிப்பாக இந்நோய் ஆண்களை காட்டிலும் பெண்களையே அதிகம் தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வகை புற்றுநோயானது தைராய்டு சுரப்பியில் இருந்து ஆரம்பமாகிறது, இந்த நோய் ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை அதனால் இதனை ஆரம்பத்தில் கண்டறிவது அரிதான ஒன்று. இந்நோயின் ஆரம்ப அறிகுறிகளாக சோர்வு, தோல், முடி, நகம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம். தைராய்டு புற்றுநோய் பொதுவாக கழுத்தின் அடிப்பகுதியில் ஒரு கட்டி, வீங்கிய நிணநீர் கணுக்கள், குரல் மாற்றங்கள் மற்றும் விழுங்குவதில் சிக்கல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
30 வயதுக்குட்பட்டவர்களில் 121%, 30-44 வயதுக்குட்பட்டவர்களில் 107%, 45-59 வயதுக்குட்பட்டவர்களில் 50%, 15% என தைராய்டு புற்றுநோயின் தாக்கம் பெண்களிடையே அதிகளவில் காணப்படுகிறது. இந்த தைராய்டு புற்றுநோயானது உலகளவில் மட்டுமல்ல இந்தியாவிலும் அதிகரித்து காணப்படுவதாக சில தரவுகள் தெரிவிக்கிறது. கழுத்தின் அடிப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி, தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்படுகிறது, உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி தைராய்டு புற்றுநோயின் தாக்கம் பெண்களிடம் மூன்று மடங்கு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. பெண்களை அதிகம் தாக்கும் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக 35 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களில் இந்த தைராய்டு புற்றுநோயானது அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
தைராய்டு சுரப்பியில் உருவாகும் ஒழுங்கற்ற உயிரணு வளர்ச்சியால் தைராய்டு புற்றுநோய் உருவாகிறது, தைராய்டு சுரப்பி இரண்டு மடல்களுடன் பட்டாம்பூச்சி போன்ற வடிவத்தில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். வேறுபடுத்தப்பட்ட தைராய்டு புற்றுநோய், அனாபிளாஸ்டிக் தைராய்டு புற்றுநோய் மற்றும் மெடுல்லரி தைராய்டு புற்றுநோய் போன்ற பல ஆபத்தான புற்றுநோய்கள் இருக்கின்றன. வயது மூப்பு, தவறான உணவுமுறை, மன அழுத்தம் அல்லது பிற காரணங்களாலும் இந்நோய் ஏற்படும். கழுத்தின் அடிப்பகுதியில் கட்டி தென்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்வது நல்லது.
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ