வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் உள்ளது. ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் சத்துக்களையும் கொண்ட வாழைப்பழம் ஏழைகளும் வாங்கி உண்ணக் கூடிய வகையில் உள்ள மிக சிறந்த பழம் எனலாம். வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது. இது நமது தசை பிடிப்பை நீக்குகிறது.
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது. எனவே மருத்துவ குணம் கொண்ட கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் அற்புத நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
* பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி - 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
* கற்பூரவள்ளி வாழைப்பழத்தில், அதிக அளவு செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள ஜீரன சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
* கற்பூரவள்ளி வாழைப்பழம் எலும்புகளுக்கு இது நல்லது. ஏனெனில் இதில் உள்ள மேங்கனீஷ், மெக்னிஷியம் எலும்புகளை பலப்படுத்தும்.
* தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது
* உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் நன்கு பயன்படுகிறது.
* கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் தோலை வீணாக்காமல் அதை சிறுசிறு துண்டாக வெட்டி மூன்று நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம்.
காலை உணவில் வாழைப்பழத்தைச் சேர்ப்பதன் மூலம், அதிக நன்மைகளை பெறலாம். நாள் முழுவதும் ஆற்றலை கொடுக்கும். மேலும் பல நோய்களில் இருந்து நம்மை காக்க வல்லது. வேலை செய்யும் போது சோர்வாகவோ அல்லது மன அழுத்தம் ஏற்பட்டாலோ வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR