வேலை நேரத்தில் தூக்கம் வருதா... இதை கடைபிடியுங்கள்

வேலை நேரத்தில் வரும் தூக்கத்தை தவிர்க்க சில எளிய டிப்ஸ்

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 12, 2022, 03:03 PM IST
  • வேலை நேரத்தில் வரும் தூக்கத்தை தவிர்ப்பது எப்படி
  • தூக்கத்தை போக்குவதற்கு எளிய வழிகள் இருக்கின்றன
வேலை நேரத்தில் தூக்கம் வருதா... இதை கடைபிடியுங்கள் title=

பலருக்கு இன்றியமையாத ஒன்று வேலை. பலரும் பல வேலை பார்த்தாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரு ஒற்றுமை வேலை நேரத்தில் வரும் தூக்கம். இதனால் பணியாளர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

தூக்கம் என்பது இயற்கையானதுதான் என்றாலும் வேலை நேரத்தில் வந்தால் அது பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும். அப்படி வேலை நேரத்தில் வரும் தூக்கத்தை போக்குவதற்கு எளிமையான வழிகள் இருக்கின்றன.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது இயல்பாகவே சோர்வை உண்டாக்கி தூக்கத்தை வரவழைக்கும். அதனால் சிறிது நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடந்து ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளலாம்.

Sleeping

உணவுகளில் சில உற்சாகத்தை உருவாக்கும். சில உணவுகள் உறக்கத்தை ருவாக்கும். அதனால் உணவில் கவனம் தேவை. உதாரணமாக பொங்கல் போன்ற பருப்பு ஐட்டங்களை தவிர்க்கலாம். அதேபோல் மதிய நேரத்தில் அளவோடு சாப்பிட்டாலும் தூக்கம் வராது.

மேலும் படிக்க | அசைவ பிரியர்களுக்கு ஒரு அட்வைஸ்.., தயவு செஞ்சு இந்த மீன் மட்டும் சாப்பிடாதீங்க.!

பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்துதான் வேலை பார்க்கின்றனர். எனவே அவர்கள் குறிப்பிட்ட நேரம் தங்களுக்கு பிடித்த பாடலையோ, இசையையோ கேட்கலாம். அப்படி கேட்கும்போது மூளை சுறுசுறுப்படைந்து தூக்கத்திலிருந்து விடுபடுவீர்கள்.

தூக்கத்திலிருந்தும், சோம்பலில் இருந்தும் விடுபடுவதற்கு பலரின் விருப்ப தேர்வாக இருப்பது டீ அல்லது காபி. எனவே எந்த வேலையாக இருந்தாலும் தூக்கம் வரும்போது அதனை ஒத்திவைத்துவிட்டு நேராக கடைக்கோ, காஃபிடேரியாவுக்கோ சென்று ஒரு டீயோ அல்லது காபியோ அருந்தலாம். தூக்கத்தோடு வேலை செய்து சொதப்புவதற்கு 10 நிமிடங்கள் தூக்கத்தை போக்குவதற்காக கழிப்பதில் எந்த தவறும் இல்லை.

மேலும் படிக்க | Corona Virus vs Moderna: 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு மாடர்னாவின் தடுப்பூசி பலனளிக்கும்

முக்கியமாக செய்யும் வேலையை விருப்பப்பட்டு ஆர்வத்தோடு செய்ய வேண்டும். கடமைக்கு செய்தோம் என்றால் எந்த ஒரு ஆர்வமும் எடுபடாமல் உடலும், மூளையும் இயல்பாகவே தூக்க நிலைக்கு செல்லும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News