கல்லீரல் கொழுப்பை எரிக்கும் ‘சில’ புரோட்டீன் உணவுகள்!

கொழுப்பு கல்லீரல் ஒரு ஆபத்தான நிலை, இது கல்லீரலை முற்றிலும் சேதப்படுத்தும். கல்லீரல் சேதமடையும் போது புரதத்தை சரியாக உறிஞ்ச முடியாது. இதனால் உடலில் கழிவுப் பொருட்கள் சேர ஆரம்பித்து மூளையை சேதப்படுத்தும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2023, 10:55 PM IST
  • லீன் புரதம் புரதத்தின் மூலமாகும். இதில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது.
  • கல்லீரலுக்கு புரதம் மிகவும் முக்கியம். திசுக்களை சரிசெய்ய புரதம் தேவை.
  • விலங்கு புரதத்திற்கு பதிலாக தாவர அடிப்படையிலான லீன் புரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கல்லீரல் கொழுப்பை எரிக்கும் ‘சில’ புரோட்டீன் உணவுகள்! title=

உடலின் மிக முக்கிய அங்கமான கல்லீரல் நமது இரத்தத்தில் உள்ள நச்சுகளை உடலில் இருந்து நீக்குவதோடு, நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவற்றை பிரித்து உடலில் சேர்க்கும் பணியையும் மேற்கொள்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செய்யும் கல்லீரலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது மிக மிக முக்கியம்.  கல்லீரல் கொழுப்பு என்பது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது ஏற்படும் பாதிப்பு ஆகும். தற்போதைய வாழ்க்கை முறை மற்றும்  கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை எதிர்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. கொழுப்பு கல்லீரல் ஒரு ஆபத்தான நிலை, இது கல்லீரலை முற்றிலும் சேதப்படுத்தும். இதை தடுக்க, மெலிந்த புரத உணவுகளை (Lean protein) உட்கொள்ள வேண்டும். லீன் புரோட்டீன் நிறைந்த சைவ விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
 
மெலிந்த புரதம் (Lean protein)

லீன் புரதம் புரதத்தின் மூலமாகும். இதில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. இதன் காரணமாக, இதில் கலோரிகளிலும் குறைவாக உள்ளது. எனவே இது 'லீன்' என்று அழைக்கப்படுகிறது. மற்ற புரதத்தை விட மெலிந்த புரதம் நம் உடலுக்கு ஆரோக்கியமானதாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது நமது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் நிறைவுற்ற கொழுப்பு இதில் மிகவும் குறைவாக உள்ளது.

கொழுப்பு கல்லீரல்

கொழுப்பு கல்லீரலின் முதல் ஆபத்து கல்லீரல் ஆரோக்கியம் மோசமடைவதால் ஏற்படுகிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது கல்லீரல் ஈரல் அழற்சிக்கு வழிவகுக்கும். கல்லீரல் பாதிப்பின் கடைசி நிலை இதுவாகும். இதில் கல்லீரலில் தடித்த கொழுப்பு படிவதால் வீக்கம் ஏற்படுகிறது. லீன் புரத உணவுகள் கல்லிரால் கொழுப்பை நீக்குவதில் சிறந்தவை.

மேலும் படிக்க |  கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும் ‘ஆயுர்வேத பொடியை’ தயாரிக்கும் முறை!

திசுக்களை சரிசெய்யும் புரதம் 

கல்லீரலுக்கு புரதம் மிகவும் முக்கிய திசுக்களை சரிசெய்ய புரதம் தேவை. புரதம் கொழுப்பு கல்லீரல் சேதத்தை குறைக்க உதவும். மேலும், கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது. ஆனால் இதற்கு விலங்கு புரதத்திற்கு பதிலாக தாவர அடிப்படையிலான லீன் புரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

விலங்கு புரதம் (Animal Protein) கல்லீரலை சேதப்படுத்தும்

கல்லீரல் சேதமடையும் போது விலங்கு புரதத்தை சரியாக உறிஞ்ச முடியாது. இதனால் உடலில் கழிவுப் பொருட்கள் சேர ஆரம்பித்து மூளையை சேதப்படுத்தும். எனவே, தாவர அடிப்படையிலான மெலிந்த புரதத்தை சீரான அளவில் உட்கொள்ள வேண்டும்.

சோயாபீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

தாவர அடிப்படையிலான உணவான சோயாவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, சோயாபீன் என்பது ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட ஒரு தாவரமாகும். அதாவது அவை முழுமையான புரதங்கள். இதில் 36 சதவீதம் முதல் 56 சதவீதம் வரை புரதச்சத்து உள்ளது. இது தவிர, இது ஃபோலேட், கால்சியம், நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.  சோயா உணவுகளை கொள்வதால் வேறு பல பலன்களும் கிடைக்கின்றன. குறிப்பாக, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் இதய நோய்களை தடுக்க முடியும். மேலும், டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளடைவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். இதனால் சிறுநீரில் அதிக அளவு புரதம் வெளியேறும். இந்நிலையில், சர்க்கரை நோயாளிகள் சோயா உணவு எடுத்துக் கொண்டால் சிறுநீரில் வெளியேறும் புரதம் குறையும்.

பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பட்டாணியில் உள்ள புரதம் புரதத்தின் மிகப்பெரிய மூலமாகும். இது தவிர நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, ஃபோலேட், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீசு மற்றும் தாமிரம் போன்றவையும் இந்த தானியத்தில் நிறைந்து உள்ளது. இந்த உணவு செரிமானத்தை எளிதாக்குகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, இருதய நலன் மற்றும் சிறுநீரகத்துக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. பச்சைப் பட்டானியை சாப்பிட்டால் நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு பசி ஏற்படுவது குறைந்து, உடல் எடை குறையத் தொடங்கும்.

பருப்பு வகைகள்

பருப்பில் புரோட்டீனுடன் நார்ச்சத்தும் உள்ளது, இது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இது தவிர ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனால் கல்லீரலில் கொழுப்பு சேர்வது குறைகிறது. அரை கப் கருப்பு உளுத்தம் பருப்பில் 12 கிராம் புரதம் உள்ளது. புரதம் மட்டுமல்லாது, இந்த பருப்பில் ஃபோலேட் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது. ஒரு கப் பச்சை பயறில் 9 கிராம் புரதம் உள்ளது. பச்சை பயறு இரும்புச் சத்து நிறைந்தது. பருப்பில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் பல நோய்களில் இருந்து நம்மை காத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதே போன்று அரை கோப்பை முழு மசூர் பருப்புபில் 9 கிராம் புரதம் உள்ளது. 

தானியங்கள் மற்றும் முளை கட்டிய தானியங்கள்

சைவ புரத உணவுகளைப் பெற தானிய வகைகளை உட்கொள்ள வேண்டும். இவற்றை சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் போன்றவையும் கிடைக்கின்றன. முளை கட்டிய உளுந்து, வேர்க்கடலை ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் அதிக புரதச்சத்து கிடைக்கும். அவற்றை ஊறவைத்து முளை கட்டும் போது சத்துக்கள் இரு மடங்காகும். அதே போன்று, பாசி பயறில் புரோட்டின் நிறைந்துள்ளது.  முளை கட்டிய பாசி பயறில் உங்களுக்கு இரட்டை புரதம் கிடைக்கும். இது வலிமையைத் தருகிறது. உங்கள் வளர்சிதை மாற்றத்தை சிறப்பாக வைத்திருக்கும். இதனால், உடல் எடை மிகவும் குறையும் இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதன் காரணமாக செரிமானம் சிறப்பாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | எடையை குறைக்க சூப்பர் வழி: இந்த பழங்களுக்கு கண்டிப்பா நோ சொல்லிடுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News