குளிர் காலத்தில் சருமத்தைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும், இல்லையெனில் முகத்தின் அழகு கெட்டுவிடும். ஆனால் பல சமயங்களில், சரியான சரும வழக்கத்தை கடைப்பிடித்தாலும், முகத்தில் பருக்கள் வரும், அப்படி ஏற்பட்டால் எங்கோ சில தவறுகளை நீங்கள் செய்கிறீர்கள் என்று அர்த்தமாகும். எனவே எங்கு தவறு நடக்கிறது மற்றும் முகப்பருவில் இருந்து விடுதலை பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
தவறான தோல் பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்துதல்
சருமப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் சருமம் எண்ணெய், வறண்டதா அல்லது இயல்பானதா என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். நீங்கள் சருமத்திற்கு ஏற்ப தவறான பொருளைப் பயன்படுத்தினால், உங்களின் சருமம் சேதமடையக்கூடும் மற்றும் முகப்பரு அதிகளவில் வெளியேறத் தொடங்கும்.
தீங்கு விளைவிக்கும் மேக்கப் பொருட்களின் பயன்பாடு
முகத்தின் அழகை அதிகரிக்கச் செய்வதால் மேக்கப் செய்யப்படுகிறது, ஆனால் ரசாயனத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும் மேக்கப் தயாரிப்புகள் ஏராளம். இது தவிர நீண்ட நேரம் மேக்கப் போடுவதால் முகத்திற்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பருக்கள் வர ஆரம்பிக்கும்.
முகத்தில் தவறான க்ளென்சரைப் பயன்படுத்துதல்
சரியான க்ளென்சரைத் தேர்ந்தெடுப்பதும் மிகவும் முக்கியமானது, இல்லையெனில் முகத்தின் தோல் சேதமடையலாம். நீங்கள் நுரை க்ளென்சரைப் பயன்படுத்தக்கூடாது, அதே போல் க்ளென்சரை ஸ்கின் எக்ஸ்ஃபோலியேட் செய்ய பயன்படுத்தக்கூடாது. இதைச் செய்வதன் மூலம், தோல் வெடிப்பு தொடங்குகிறது. நீங்கள் சிறந்த முடிவைப் பெற விரும்பினால், நீர் அடிப்படையிலான சுத்தப்படுத்திகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.
வெறும் வைப்ஸ் மூலம் மேக்கப் நீக்குதல்
மேக்கப்பை நீக்க மட்டும் வைப்ஸ் பயன்படுத்தினால் தவறில்லை, அதை பயன்படுத்திய பின் ஃபேஸ் வாஷ் பொருட்களையும் பயன்படுத்த வேண்டும், அது முகத்தில் உள்ள அனைத்து விதமான கெமிக்கல்களையும் நீக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ