ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளை மெல்லக் கொல்லும் நோயாகும். நவீன வாழ்க்கை முறைகளால், ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சுமார் 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தரவுகள் கூறுகின்றன. அவர்களில் 80% பெண்கள். ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய், எலும்புகளை சல்லடையாய் துளைத்து எலும்பு முறிதல் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஆஸ்டியோபோரோசிஸ் என்பதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாது. எலும்புகள் தொடர்பான மிகவும் தீவிரமான நோயான, இதில் மூட்டு வலி பிரச்சனை அதிகரிக்கும். எலும்பு முறிதல் அபாயம் நினைத்து பார்க்க முடியாத அளவில் அதிகரிக்கும். குனிவது அல்லது இருமல் கூட எலும்பு முறிவுகளை ஏற்படுத்தும். இதில் இடுப்பு, மணிக்கட்டு அல்லது முதுகுத்தண்டு எலும்புகளில் இந்தப் பிரச்சனை அதிகமாகக் காணப்படும்.
ஆஸ்டியோபோரோசிஸ் என்றால் என்ன? (What Is Osteoporosis)
ஆஸ்டியோபோரோசிஸில், எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்குகிறது. எனவே இதனை எலும்பு மெலிதல் நோய் என்கிறார்கள். இதன் காரணமாக எலும்புகள் உள்ளிருந்து பலவீனமடையத் தொடங்குகின்றன. பிரச்சனை தீவிரமாகும் நிலையில், சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், ஊனம் ஏற்படும் (Health Tips) வாய்ப்பும் உண்டு.
ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்தைக் குறைக்க செய்ய வேண்டியவை (How To Prevent Osteoporosis)
எலும்புகளுக்கு ஏற்ற உணவை தவறாமல் டயட்டில் மூலம் உங்கள் எலும்புகளை வலுப்படுத்தி, ஆஸ்டியோபோரோசிஸ் ஆபத்தைக் குறைக்கலாம். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியம். அதோடு வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் மிக அவசியம். ஏனென்றால், வைட்டமின் டி இல்லை என்றால், உணவுகளில் உள்ள கால்ஷியம் உடலில் கிரகித்து கொள்ள முடியாமல் போய் விடும். உங்கள் எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்க வாரத்தில் ஏழு நாட்களும் கால்சியம், வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகள் இருக்கட்டும்.
மேலும் படிக்க | ஆபீஸ் டென்ஷன் அதிகமா இருக்கா... இந்த டிப்ஸ்களை கடைபிடிங்க...
எலும்புகளை வலுப்படுத்தும் உணவுகள் (Foods Make Bones Strong)
ஆஸ்டியோபோரோசிஸைத் தவிர்க்க, நீங்கள் உங்கள் உணவை மேம்படுத்த வேண்டும். முதலில், உங்கள் உணவில் பால் மற்றும் பால் பொருட்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை சேர்க்கவும். அதோடு, எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும், எள், சியா விதைகள் போன்ற விதைகள், நட்ஸ் வகைகள், மீன் உணவுகள், பச்சை காய்கறிகள், குறிப்பாக கீரை ப்ரோக்கோலி போன்றவற்றை சேக்க வேண்டும். வைட்டமின் டி உட்கொள்ளலை குறைக்கக்கூடாது. அதனால், சூரிய ஒளியைப் பெறுவதும் முக்கியம். உணவுடன் உங்கள் வாழ்க்கை முறைக்கு உடற்பயிற்சியை சேர்க்கவும். உடல் பயிற்சி மற்றும் உழைப்பு எலும்புகளை பலப்படுத்தும்.
எலும்புகளை வலிவிழக்கச் செய்யும் உணவுகள் (Foods That Makes Bone Weak)
எலும்புக்கு வலுவீட்டும் உணவுகளை சாப்பிடும் அதே சமயம், அதே சமயம், எலும்புகளில் இருந்து கால்ஷியத்தை உறிஞ்சி, சல்லாடையாய் துளைக்கும் சில உணவுகளை தவிர்ப்பதும் அவசியம், இதில் பதப்படுத்தப்பட்ட, உணவுகள், அதிக சர்க்க்ரை சேர்த்த உணவுகள் மற்றும் செயற்கை பானங்கள், மைதா உணவுகள், ரெடி டு ஈட் வகை உணவுகள் ஆகியவை அடக்கம்.
மதுபழக்கம் மற்றும் புகை பழக்கம்
அதிகமாக மது உட்கொள்பவர்களுக்கு மற்றும் புகை பிடிப்பவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. ஏனெனில், இவை இரண்டு எலும்புகளை சல்லடையாக்குகின்றன.
எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும், முதுமை காரணமாக ஏற்படும் மூட்டு வலியிலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களை கட்டாயம் பின்பற்றவும்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | பயம் காட்டும் சுகர் லெவலை பக்குவமாய் குறைக்கும் பச்சை இலைகள்: சாப்பிட்டு பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ