பச்சை தக்காளியில் இத்தனை நன்மைகளா... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

Health Benefits of Green Tomato: தக்காளி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது சிவப்பு நிற தக்காளி. தக்காளிக்காய் என்னும் பச்சை தக்காளி, சிவப்பு தக்காளியை விட அதிக நன்மை தரக்கூடியது என்று அறிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 4, 2024, 10:35 AM IST
  • பச்சை தக்காளி, சிவப்பு தக்காளியை விட அதிக நன்மை தரக்கூடியது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது முதல், கண் பார்வையை மேம்படுத்துவது வரை நன்மைகள் ஏராளம்.
  • பச்சை தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
பச்சை தக்காளியில் இத்தனை நன்மைகளா... இத்தனை நாள் இது தெரியாம போச்சே! title=

Health Benefits of Green Tomato in Tamil: தக்காளி என்பது தவிர்க்க முடியாத ஒரு காய்கறி. பருப்பு முதல் காய்கறி வரை, சமைக்கும் போது தக்காளியை சேர்ப்பது சுவையை இரட்டிப்பாகுகிறது. தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. தக்காளி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது சிவப்பு நிற தக்காளி. ஆனால் தக்காளிக்காய் என்னும் பச்சை தக்காளி, சிவப்பு தக்காளியை விட அதிக நன்மை தரக்கூடியது என்று அறிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

சிவப்பு தக்காளியை போலவே பச்சை தக்காளி, புளிப்பு சுவையை கொடுப்பதாக இருந்தாலும், அதன் புளிப்பு சுவை சிறிது வித்தியாசமாக இருக்கும். வைட்டமின்கள் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், பொட்டாசியம், புரதம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் என இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை ஒரு பட்டியலாகவே போடலாம். இதனை சாலட் வடிவிலும், சமைத்தும் உண்ணலாம். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது முதல், கண் பார்வையை மேம்படுத்துவது வரை இதில் உள்ள நன்மையை (Health Tips) அறிந்து கொண்டால், நீங்கள் பச்சை தக்காளியை தினமும் சேர்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.

எலும்பு ஆரோக்கியம்

எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், கால்சியம் மற்றும் விட்டமின் கே சத்துக்கள், பச்சை தக்காளியில் நிறைந்துள்ளது. எலும்புகள் பலவீனமாக இருந்தாலும், தொடர்ந்து வழிகள் இருந்தாலும் பச்சை தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டால் பலன் கிடைக்கும்.

கண்பார்வை

கண் ஆரோக்கியத்திற்கு தேவையான, பீட்டா கரோட்டின் பச்சை தக்காளியில் நிறைந்துள்ளது. ஆரோக்கியமான வெள்ளை ரத்த அணுக்களை உருவாக்குவதன் மூலம், கண் திறன் பச்சை தக்காளிக்கு உண்டு.

மேலும் படிக்க | சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? ‘இந்த’ யோகாசனங்களை செய்து பாருங்கள்..

ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் இருந்தால், பச்சை தக்காளியை நீங்கள் உணர் கண்ணுக்குள்ள வேண்டும். இதில் பொட்டாசியம் நிறைந்து இருப்பதாலும், சோடியம் குறைவாக இருப்பதாலும், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதனால் மாரடைப்பு அபாயமும் கணிசமாக குறைகிறது.

சரும ஆரோக்கியம்

பளபளவென்று ஆரோக்கியமான சருமத்திற்கு, பச்சை தக்காளி வரப்பிரசாதம். இதில் உள்ள வைட்டமின் சி, முதுமை அண்டாமல் தடுப்பதோடு, சருமத்தை நீண்ட காலத்திற்கு இளமையாகவும் அழகாகவும் பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் செல்கள் சேதத்தை தடுத்து, சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த பச்சை தக்காளி, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, தொற்று நோய்கள், சளி இருமல், பருவ கால நோய்கள் ஆகியவற்றிலிருந்து நமக்கு பாதுகாப்பை வைக்கிறது

ரத்தம் உறையும் திறன்

பச்சை தக்காளியில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் ரத்தம் உறையும் திறனை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் கே சத்து தான் இதற்கு காரணம். காயம் ஏதேனும் ஏற்பட்டால், ரத்தம் உறைந்து ரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்கும் திறன் வைட்டமின் கே மூலம் உடலுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. 

மேலும் படிக்க | டின்னர் டிப்ஸ்... செரிமான பிரச்சனைகளுக்கு குட் பை சொல்ல நீங்கள் செய்ய வேண்டியவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News