Moringa Leaves Health Benefits: முருங்கை இலைகள் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஏனெனில் முருங்கை இலையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. தினமும் காலையில் முருங்கை இலையை மென்று சாப்பிட்டு வந்தால், அது உடலில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். முருங்கை இலைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் தினமும் காலையில் முருங்கை இலைகளை மென்று சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், அது உங்களுக்கு அதிசயங்களைச் செய்யும். முருங்கை இலைகளின் நன்மைகள் மிகச் சிறந்தவை. முருங்கை இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலில் என்ன சாதகமான மாற்றங்களை ஏற்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
உடலுக்கு முருங்கை இலையின் நன்மைகள் | Benefits of Moringa Leaves For The Body
1. ஊட்டச்சத்து நிறைந்தது
முருங்கை இலையில் அதிக அளவு வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், கால்சியம், பொட்டாசியம், புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம், உங்கள் உடல் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பெறுவதுடன் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.
2. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்
முருங்கையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, அதுடன் முருங்கை இலை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் உடலை நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது.
மேலும் படிக்க | ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க...காலையில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்!
3. இதய ஆரோக்கியமாக இருக்கும்
முருங்கை இலைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவற்றில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இதயத் துடிப்பை சீராக்க வைத்திருக்க உதவுவதுடன் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவும்.
4. செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது
முருங்கை இலையில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
5. தோல் மற்றும் முடி பராமரிப்பு
முருங்கை இலைகளில் ஏராளமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, இது சருமத்தையும் கூந்தலையும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது சருமத்தின் வயதான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது மற்றும் முடிக்கு வலிமையை தரவும் உதவுகிறது.
6. எடை இழப்பு
முருங்கை இலைகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பசியைக் குறைகக்கும், உடலில் ஆற்றலை அதிகரிக்கும்.
7. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்
முருங்கை இலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
8. மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
முருங்கை இலையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஏனெனில் இந்த இலையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுகர் அளவை தட்டி கழிக்க இந்த உலர் பழங்களை கட்டாயம் சாப்பிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ