உடல் இளைக்கும் இலட்சியத்தில் வெற்றிப் பெறுவதைத் தடுக்கும் பொதுவான தவறுகள்

Weight Loss Mistakes In Hurry: உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளில் அவசரத்தின் நாம் அறியாமல் செய்யும் தவறுகள், உடல் இளைக்கும் இலட்சியத்தில் வெற்றிப் பெறுவதைத் தடுக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 7, 2023, 10:35 AM IST
  • உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது செய்யும் பொதுவான தவறுகள்
  • அவசரத்தில் அறியாமல் செய்யும் தவறுகள்
  • உடல் இளைக்கும் இலட்சியத்தில் வெற்றிப் பெறுவதைத் தடுக்கும் வழக்கங்கள்
உடல் இளைக்கும் இலட்சியத்தில் வெற்றிப் பெறுவதைத் தடுக்கும் பொதுவான தவறுகள் title=

உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும் அவை அனைத்துமே அனைவருக்கும் ஒன்றுபோல பலன் கொடுப்பதில்லை. அதிகரித்த உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நினைத்து, பலரும் முயற்சிகளை செய்து வருகின்றனர். ஆனால், உடல் எடைக் குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்களை அறியாமலேயே தவறுகளை செய்வதால், ஒல்லியாகும் அவர்களின் முயற்சி, கனவாகவே இருந்துவிடுகிறது.

அதிலும், சில தவறுகள் உடலில் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. நமது உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளில் தவறு என்ன என்பதை முதலில் தெரிந்துக் கொள்வோம். அதன் பிறகு, அவற்றை தவிர்த்து, உடல் இளைக்கும் இலட்சியத்தில் விரைவில் வெற்றிப் பெறலாம்.  

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது செய்யும் பொதுவான தவறுகள் 
மன அழுத்தம்

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டும், ஒல்லியாக வேண்டும் என்று மிகவும் தீவிரமாக நினைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இந்த அழுத்தமானது, உடலில் ஏற்படும் வேதி மாற்றங்களால், உடல் எடை குறையாது, மாறாக சிலருக்கு உடல் எடை அதிகரிக்கும்.

எனவே, உடல் எடையை குறைப்பது என்பது, உங்கள் மனதை அழுத்தத்திற்கு காரணம் அளவுக்கு சீரியசாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!

உணவைத் தவிர்ப்பது 

உணவைத் தவிர்ப்பது உடல் எடையை அதிகரிக்கும். ஆச்சரியமாக உள்ளதா? ஆனால், உண்மை இது. உணவை குறைப்பதால், தொடக்கத்தில் அது பரவாயில்லை என்று தோன்றினாலும், சில நாட்களிலேயே நொறுக்குத் தீனிகள் சாப்பிடத் தோன்றும். நொறுக்குத்தீனி என்பது பழத்தில் ஆரம்ப்பிக்கும், ஆனால் அது, ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனியாக மாற அதிக காலம் எடுப்பதில்லை.

எனவே, உணவை குறைக்கும்போது, அதில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடு கொண்டுவருவதுந் ல்லது. ஒட்டுமொத்தமாக தவிர்க்க முயற்சி செய்வதை விட குறைவான கலோரி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. 

சாப்பிடும் உணவு 5 - 10% அளவுக்கு மட்டும் குறைந்தால் மக்கள் அது பெரிய அளவில் தெரியாது. எனவே, உணவு உண்ணும் தட்டின் அளவை சிறியதாக மாற்றுவது நல்லது. இது,  கவனக்குறைவாக அதிக கலோரிகளை உண்ணுவதை தவிர்க்க உதவும்.

உணவில் ஊட்டச்சத்துகள்

உணவின் அளவை குறைக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, நார்ச்சத்து, புரதம் போன்ற அத்தியாவசிய சத்துக்களின் அளவை, நமக்குத் தெரியாமலேயே குறைத்து விடுகிறோம். இதன் எதிரொலி, நாம் எதிர்பார்க்கும் அளவு உடல் எடை குறைவதில் தெரிகிறது. அதேபோல, சீரான ஊட்டச்சத்து உணவுகளையும் தவிர்க்கத் தொடங்கிவிடுகிறோம்.

மேலும் படிக்க | சிறு வயதிலேயே முடி நரைக்கு இதுதான் காரணம்.. பெஸ்ட் தீர்வும் இதுதான்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை 

உணவை குறைப்பதைப் போலவே, நமக்குத் தெரியாமலேயே, தண்ணீர் குடிப்பதையும் தவிர்த்துவிட்டால், உடல் எடைக் குறைப்புக்கான முயற்சிகள் அனைத்துமே வீணாகிவிடும்.

உணவைத் தவிர்ப்பது

உணவைத் தவிர்ப்பது, உடல் எடையைக் குறைப்பதற்கான வழி என பலர் தவறாக நினைத்துக் கொள்கின்றனர். உண்மையில், உணவைத் தவிர்ப்பது எதிர்மறையான பலன்களையே ஏற்படுத்தும்.

காலை உணவு, சத்துள்ளதாக அதிகமாகவும் இருக்கலாம், மதிய உணவு சாதாரணமாக இருப்பதும், இரவு உணவு மிகவும் எளிமையானதாகவும் இருப்பது நல்லது. காலையில் எவ்வளவு தாமதமாகச் சாப்பிடுகிறோமோ அதைப் பொறுத்து உடல் எடை கூடும்.

இரவில் குறைவாக வேலைச் செய்கிறோம் என்பதும், நமது உடல் கடிகாரம் இரவில் செரிமாணத்தை மந்தமாக்கிவிடும் என்பதால், இரவில் அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை கூட்டி விடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சட்டுனு எடை குறையணுமா... பட்டுனு காலையில் இதை பன்ணுங்க: சூப்பரா குறையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News