எலும்பு தேய்மானம் முதல் ஹார்மோன் பிரச்சனை வரை! கால்சியம் குறைவை சரிசெய்ய டிப்ஸ்!

Importance Of Calcium For Bone Health : கால்சியம் நிறைந்த கரிம உணவை உட்கொள்வதன் மூலம் கால்சியம் குறைபாடு நோய் எனப்படும் ஹைபோகால்சீமியா ஏற்படுவதைத் தவிர்க்கலாம்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 7, 2024, 04:40 PM IST
  • கால்சியத்தின் முக்கியத்துவம்
  • உணவில் இருந்தே ஆரோக்கியம் உருவாகும்...
  • மருந்தே இல்லாத வாழ்க்கை வேண்டுமா?
எலும்பு தேய்மானம் முதல் ஹார்மோன் பிரச்சனை வரை! கால்சியம் குறைவை சரிசெய்ய டிப்ஸ்! title=

நமது அன்றாட செயல்பாடுகளுக்கு கால்சியம் சத்து தேவை. இவை போதுமான அளவு உணவில் இல்லாத சூழலில் எலும்பை பராமரிக்க தேவையான கால்சியம் எலும்புப் பகுதிக்குச் செல்லாது. எனவே எலும்புகள் பலமிழக்கும். கால்சியம் குறைபாடு ஏற்படாமல் தடுக்க பால் உள்ளிட்ட கால்சியம் சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.  மூட்டுப்பகுதிகளில் மசகு திரவம் சுரப்பது குறைந்தால் மூட்டு வலி ஏற்படும். 

தினசரி நாம் எவ்வளவு கால்சியம் உட்கொள்ள வேண்டும்? இது பலருக்கும் தெரிவதில்லை. கால்சியம் நிறைந்த கரிம உணவை உட்கொள்வதன் மூலம் கால்சியம் குறைபாடு நோய் எனப்படும் ஹைபோகால்சீமியா ஏற்படுவதைத் தவிர்க்கலாம். 

ஆனால் யாருக்கு எவ்வளவு கால்சியம் தேவை என்பது வயதைப் பொறுத்து மாறுபடும். ஆனால், தேவைக்கு அதிகமாக கால்சியம் உட்கொள்வது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பெண்களுக்கு தனியாகவும் ஆண்களுக்கு கால்சியம் நிறைந்த உணவுகள் என தனித்தனியாக இல்லை. வயதிற்கு ஏற்ப நீங்கள் உட்கொள்ள வேண்டிய கால்சியத்தின் அளவு பொதுவானதாக இருக்கும்.

கால்சியம் சத்தை பராமரிக்க தினமும் பால் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஏனெனில் அதில் கால்சியம் நிறைந்துள்ளது. ஆனால் பாலுடன், நம் உடலின் கால்சியம் தேவையை பூர்த்தி செய்ய உதவும் பல உலர் பழங்களும் உள்ளன. எலும்புகளின் நண்பர்கள் நாம் உண்ணும் உணவு தான் என்பதை புரிந்துக் கொள்வது அவசியம்.

அதிலும், பெண்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படுவது அதிகமாக உள்ளது. அதற்கு காரணம்,  உணவில் கால்சியம் நிறைந்த உணவுகள் இல்லாதது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்,போதுமான வைட்டமின் டி அளவுகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை கால்சியம் உறிஞ்சுதலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் காபி குடிப்பவரா நீங்கள்? இந்த பிரச்சனையெல்லாம் வரும் ஜாக்கிரதை!

பெண்களுக்கு போதுமான கால்சியம் கிடைக்கவில்லை என்றால், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுகள் அல்லது எலும்பு இழப்பு ஏற்படும் அபாயம் அதிகம். போதுமான கால்சியம் இல்லாவிட்டால், எலும்பு அடர்த்தி குறைந்து, அவை எளிதில் உடையக்கூடியதாக மாறிவிடும். அதனால்தான் எலும்புகளுக்கு கால்சியம் நிறைந்த உணவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கால்சியத்தை அதிகரிப்பது எப்படி என்ற கேள்விக்கு உணவு தான் வழி என்று சொல்வதே நல்லது. ஏனென்றால், மாத்திரைகள் சாப்பிடுவது நிரந்தர தீர்வு கிடையாது. கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களில் சோயா பால் ஒன்றாகும்.அதிக கால்சியம் கொண்ட உணவுகளில் சோயா மற்றும் சோயா பால்  முக்கியமானவை.

விதைகள்
எள் மற்றும் சியா விதைகள் போன்ற கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

தயிர்
தயிரில் கால்சியம் மட்டுமின்றி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாடிக்குகளும் உள்ளன. பால், தயிர் போன்றே பனீரிலும் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது.

பாதாம்
பாதாமில் கால்சியம் மட்டுமின்றி, ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளது.  எனவே பாதாமை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. 

(பொறுப்பு துறப்பு: தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலுல் படிக்க | Pregnant Women: பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க இந்த விஷயங்களை மட்டும் செய்யுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News