Benefits of lemon: அதிகமில்லை, ஒரே ஒரு எலுமிச்சை செய்யும் அற்புதங்கள்..!!

அதிகம் வேண்டாம், ஒரே ஒரு எலுமிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இது ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஒரு  பழம் என்றால் மிகையாகாது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 10, 2021, 05:27 PM IST
  • சுவையில் புளிப்பான எலுமிச்சையில் ஆரோக்கியத்தின் பல இனிமையான நன்மைகள் நிறைந்துள்ளன.
  • எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
  • ர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த எலுமிச்சை.
Benefits of lemon:  அதிகமில்லை, ஒரே ஒரு எலுமிச்சை செய்யும் அற்புதங்கள்..!! title=

எலுமிச்சையின் பல ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம். சுவையில் புளிப்பான எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை அள்ளித் தருகிறது. அதிகம் வேண்டாம், ஒரே ஒரு எலுமிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இது ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஒரு  பழம் என்றால் மிகையாகாது. 

எலுமிச்சை சுவையில் புளிப்பாக இருந்தாலும், ஆரோக்கியத்தின் பல இனிமையான நன்மைகள் இதில் பொதிந்துள்ளன. எலுமிச்சை சாப்பிடுவதால் உடலின் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். மேலும், எலுமிச்சை சாரைக் குடிப்பது உங்கள் உடலின் கூடுதல் கலோரிகள் அதிக அளவில் எரிக்கப்படுவதோடு, எடை இழப்பிற்கும் உதவுகிறது.

ஆயுர்வேதமும் எலுமிச்சையும்

ஆயுர்வேதத்தில் எலுமிச்சைக்கு  சிறந்த முக்கியத்துவம் உண்டு. ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி இது குறித்து கூறுகையில், எலுமிச்சை தினமும் எடுத்துக் கொள்வது  உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் எனக் கூறுகிறார். இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் எலுமிச்சை, ஆஸ்துமாவை குணப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

ALSO READ | Osteoporosis: எலும்பு மெலிதல் நோயிலிருந்து தப்பிக்க கால்ஷியம் மட்டும் போதாது ..!!

எலுமிச்சையில் உள்ள சத்துக்கள்

எலுமிச்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், பாந்தோத்தேனிக் அமிலம், நியாசின், தியாமின் மற்றும் பல வகையான புரதங்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எலுமிச்சையும் ஆரோக்கியமும்

1. செரிமானத்தை சீராக்கும் எலுமிச்சை 

சுவையில் புளிப்பான  எலுமிச்சையில் ஆரோக்கியத்தின் பல இனிமையான நன்மைகள் நிறைந்துள்ளன. எலுமிச்சை சாப்பிடுவதால் உடலின் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். எலுமிச்சை சாரை குடிப்பது உங்கள் உடலில் கூடுதல் கலோரிகளை எரிப்பதோடு, எடை இழப்பிற்கும் உதவுகிறது.

2. முகப்பருவில் இருந்து நிவாரணம்

எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். எலுமிச்சை விதைகள் உங்கள் முகத்தில் உள்ள முகப்பருவை அகற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு நிறைந்தது.

3. எடை இழப்பு

தொப்பை மற்றும் எடையைக் குறைக்க, தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடிக்கவும். நீங்கள் விரும்பினால், அதனுடன் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்க்கலாம். இது நிச்சயம் பலனளிக்க கூடியது.

ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!

4. சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த எலுமிச்சை 

ரத்ததில் அதிக சர்க்கரை உள்ளவர்களுக்கு எலுமிச்சைப் பழம் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் அல்லது எடை இழக்க விரும்புவோருக்கு, எடையை குறைப்பதோடு ஆற்றலையும் வழங்குகிறது.

ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்

5. வயிற்று வலியை நீக்கும் எலுமிச்சை
எலுமிச்சை சாற்றில் இஞ்சி சாற்றை சிறிது சர்க்கரையுடன் கலந்து சாப்பிடுவது வயிற்று வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் எலுமிச்சை பழத்தை பிழிவது காய்கறிகளின் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கிறது. இது உணவுகளை விரைவாக ஜீரணிக்கவும் உதவுகிறது.

ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News