Belly Fat Reduction: திராட்சையும் வெல்லமும் ஜோடி சேர்ந்தால் காணமல் போகும் தொப்பை

திராட்சை மற்றும் வெல்லத்தைப் பயன்படுத்தி தொப்பையை வேகமாக குறைக்கலாம்! அந்த டிரிக்ஸ் உங்களுக்குத் தெரியுமா?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 11, 2022, 12:57 PM IST
  • எடை இழப்புக்கு எளிய வழி
  • தொப்பைக்கு சவால் விடும் திராட்சை + வெல்லம் கோம்போ
  • தொப்பைக்கும் எடைக்கும் எதிரியாகும் உணவுகள்
Belly Fat Reduction: திராட்சையும் வெல்லமும் ஜோடி சேர்ந்தால் காணமல் போகும் தொப்பை title=

புதுடெல்லி: உடல் எடையை குறைப்பது கடினம் அல்ல, நீங்கள் உங்கள் உணவை ஒழுங்குபடுத்தினால் போதும் உடல் எடையை குறைப்பது, உணவு உண்பதைப் போன்ற சுலபமானதே.... 

ஆனால், உடல் எடையை குறைப்பது பிரம்ம பிரயத்தனம் என்று நினைப்பவர்களும் உண்டு.  உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி என்ற இரண்டும் தான் உடல் ஆரோக்கியம் மற்றும் சரியான உடல் எடைக்கு அடிப்படையாகும்.

எடை இழப்புக்கு திராட்சை மற்றும் வெல்லத்தை பயன்படுத்தி சுலபமாக உடல் எடையை குறைக்கலாம்.  

திராட்சை மற்றும் வெல்லம் இரண்டு சூப்பர்ஃபுட்களின் கலவை
திராட்சை மற்றும் வெல்லம் ஆகியவை ஆரோக்கியத்திற்கு உகந்த ஊட்டச்சத்துக்களால் நிரம்பியிருப்பதால் சூப்பர்ஃபுட்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், சுவாச மண்டலத்தைச் சுத்தப்படுத்தவும் உதவுகிறது.

மேலும் படிக்க | நரை முடி கருமையாக வளர வீட்டிலேயே இத செஞ்சா போதும் 

எலும்புகளை வலுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தில் உதவவும் உதவும் இந்த அற்புதமான சூப்பர்ஃபுட்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டு எடை இழப்பு செயல்முறையை விரைவுபடுத்துகினிறன. உங்கள் எடை இழப்பு இலக்குகளை விரைவாக அடைய உதவும் எளிமையான உணவுப்பொருட்கள் இவை ஆகும்.

வெல்லத்தின் சத்துக்கள் மற்றும் நன்மைகள்
மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், செலினியம், மாங்கனீசு, இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்த வெல்லம் இனிப்பான உணவு. சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டாலும், இதுதான் உண்மையான இன்சுவையைக் கொண்டது. 

வெல்லத்தில் கலோரிகள் மட்டுமல்ல, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிறைந்துள்ளன, இது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.

health

எடை இழப்புக்கு வெல்லம் எவ்வாறு உதவுகிறது
வெல்லத்தில் கலோரிகள் குறைவு; 20 கிராம் வெல்லத்தில் 38 கலோரிகள் உள்ளன. இயற்கை இனிப்பு எலெக்ட்ரோலைட் அளவை சமப்படுத்தவும், உடலில் நீர் தேங்காமல் தடுக்கவும் உதவுகிறது.

ஆனால் வெல்லத்தின் நுகர்வு உங்கள் எடை இழப்பு செயல்முறையை மாற்றியமைத்து கெடுக்கும் என்பதையும் கவனத்தில் வைத்துக் கொண்டு, வெல்லமாக இருந்தாலும் அளவுடன் பயன்படுத்தவேண்டும்.  

மேலும் படிக்க | நரை முடி கருமையாக வளர வீட்டிலேயே இத செஞ்சா போதும் 

திராட்சையின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள்
நார்ச்சத்து நிறைந்த, திராட்சை உங்கள் பசியைத் தணிப்பதோடு, நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது.  உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சிற்றுண்டி விருப்பம். 

திராட்சையில் இருக்கும் இயற்கை இனிப்புகள் மற்றும் இரும்பு, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கும் செயல்முறையை துரிதப்படுத்தவும் உதவும்.  

health

தொப்பையைக் குறைக்க திராட்சை மற்றும் வெல்லத் தண்ணீரை எப்படி எடுத்துக்கொள்வது?
வெதுவெதுப்பான நீரில் 4-5 திராட்சையை போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 கிராம் அளவிலான சிறிய வெல்லக்கட்டியை சேர்க்கவும். 

மேலும் படிக்க | தொப்பையை குறைக்க இந்த பானங்கள் உங்களுக்கு உதவும் 

முதலில் வெறும் வயிற்றில் ஊற வைத்த திராட்சையை சாப்பிட்டுவிட்டு, வெல்லம் கலந்த தண்ணீரைக் குடிக்கவும். இதை தினமும் செய்து வந்தால் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கலாம்.
 
திராட்சையை சாப்பிட மற்றொரு வழி தயிர். 4-5 திராட்சையுடன் தயிரை சேர்த்து, உணவுக்குப் பிறகு சாப்பிடுங்கள். இந்த செய்முறை உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.

வெல்லம் மற்றும் திராட்சை இரண்டும் எடை இழப்புக்கு நல்லது, ஆனால் நீங்கள் அவற்றை மிதமாக உட்கொண்டால் மட்டுமே அது பலனளிக்கும். இரண்டு சூப்பர்ஃபுட்களில் ஏதேனும் ஒன்றை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிக்க வழிவகுக்கும். 

அதிலும் நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் அல்லது ஏதேனும் மருந்துகளை எடுத்துக்கொண்டால், இந்த எடை இழப்பு தீர்வை முயற்சிக்கும் முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News