மனித உடலின் செயல்பாடு மூளையை பெரிதும் சார்ந்துள்ளது. தகவல் மற்றும் தரவை நன்று ஆய்வு செய்த பிறகு, எந்த வகையான வேலையைச் செய்ய வேண்டும் என்று உடலின் பல்வேறு பகுதிகளுக்கு மூளை கட்டளைகளை அளிக்கின்றது.
இருப்பினும், காலப்போக்கில் பல காரணங்களால், மூளையின் (Brain) செயல்திறன் குறைவது வழக்கமான ஒன்றாகும். மூளையை மேம்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா? ஆம்!! வழி இருக்கிறது. எந்த வயதிலும் மனதை கூர்மையாக்கி மேம்படுத்த சில நல்ல வழிமுறைகள் உள்ளன.
மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விளையாட்டுகளை விளையாடுவது:
கற்றலின் ஆரம்ப கட்டங்களில், குழந்தைகளுக்கு (Children) பெரும்பாலும் புதிர்கள் மற்றும் சிக்கல்களை தீர்க்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இது அவர்களின் அடிப்படை புரிதல் வளர்ச்சியின் ஒரு முக்கிய பகுதியாகும். இருப்பினும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் செயல்முறை வாழ்க்கையின் பிற்கால கட்டங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவியல் பரிந்துரைக்கிறது.
ALSO READ: Yoga for kids: குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த ஒரு யோகாசனம் போதும்
புதிர்கள், சீட்டு விளையாட்டுகள், வினாடி வினாக்கள் போன்ற மன விளையாட்டுகள் மனதை ஈடுபடுத்தி அதன் பயிற்சியை ஊக்குவிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மன விளையாட்டுகள் (Mental Games) பகுப்பாய்வு திறன்கள், நினைவாற்றல், படைப்பாற்றல் மற்றும் சிந்தனை ஆகியவற்றை மேம்படுத்தும்.
பல மொழிகளைக் கற்பது:
இரு மொழிகளில் (Language) பேசுவது மூளைக்கு அதிக வேலையைத் தந்து அதை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதில் இருமொழிப் பயன்களின் நன்மைகளை பல ஆராய்ச்சிகள் ஆதரிக்கிறன. பப்மெட் சென்ட்ரலில் வெளியிடப்பட்ட ஒரு மதிப்பாய்வின் படி, இருமொழி பயன்பாடு, படைப்பாற்றல், கற்றல் திறன் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவும். வயது தொடர்பான நினைவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தையும் இது குறைக்கும்.
இசையைக் கற்பது:
பியானோ கலைஞர் சிக்கலான இசை குறிப்புகளை வியக்க வைக்கும் வேகத்தில் வாசிப்பதும், கிதார் கலைஞர் அற்புதமாக பல டியூன்களை வாசிப்பதும், மூளையின் ஆற்றலால்தான்.
ப்ளோஸ் ஒன்னில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, இசை படைப்பாற்றல், மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது. இசைக் கருவிகளை வாசிப்பது ஒரு அற்புதமான திறனாகும். இது, கற்றல், நினைவாற்றல் மற்றும் மூளையின் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்த உதவும்.
தியானம்:
பழங்காலத்திலிருந்தே தியானம் என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மனதை அமைதிப்படுத்தி, உடலை தளர்த்தும் திறன் காரணமாக இது இப்போது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ளது.
ஆராய்ச்சியின் படி, தியானம், தகவலை செயலாக்கும் திறன், மன நிலை அபாயத்தை குறைத்தல் மற்றும் உணர்ச்சிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
ALSO READ: Health News: குடல் புழுக்களை வெளியேற்ற உணவே மருந்து
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR