Kidney Health: சிறுநீரக நோய்களின் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை வெளியே தெரியாது; காலப்போக்கில் மெதுவாக தீவிரமடையும். எனவே இந்த சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறுநீரகத்தின் செயல்பாடு, நம் உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்டுவது. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால், இரத்தத்தை வடிகட்டும், சுத்தம் செய்யும் முக்கிய வேலை பாதிக்கும். சிறுநீரக நோயில், சிறுநீரகம் சரியாக செயல்பட முடியாது. பின்னர் இந்த பிரச்சனை, நாள் செல்ல செல்ல தீவிரமடையும். இதனால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயமும் உள்ளது.
சிறுநீரக பிரச்சனை ஏற்பட காரணம்
உயர் இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் காரணமாக சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படலாம். இது தவிர புகைபிடிப்பதும் ஒரு காரணம். அதிக உடல் எடையும் நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
சிறுநீரக நோய்க்கான அறிகுறிகள்
சிறுநீரக நோய் என்பது ஒரு Silent Killer எனலாம். இதனால் சிறுநீரக செயலிழப்பிற்கு வழி வகுக்கும் நாள்பட்ட சிறுநீரக நோயின் முக்கிய அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் காரணமாக தூங்க முடியாமலும் சிரமங்கள் ஏற்படும். நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படும்போது, உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்ட முடியாமல் போவதால், உடலில் அரிப்பு, தசைப்பிடிப்பு, பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி, கால்கள் மற்றும் கணுக்காலில் வீக்கம், அதிக சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் கழிக்க இயலாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | குங்குமப்பூ பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம், கட்டாயம் ட்ரை பண்ணுங்க
கடைபிடிக்க வேண்டிய உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள்:
நீரிழிவு பிரச்சனை இருந்தால், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும். நாள்பட்ட சிறுநீரக நோயின் போது நீரிழிவு பிரச்சினை நோயை தீவிரமாக்கும்.சீரான உணவை உட்கொள்வதன் மூலம் நாள்பட்ட சிறுநீரக நோய் தீவிரமடைவதை தடுக்கலாம். உணவில் குறைந்த அளவு உப்பைப் பயன்படுத்துங்கள்.மது அருந்துவதையும், புகைபிடிப்பதைத் தவிர்க்கவும். இந்த இரண்டு விஷயங்களும் நோயை மிகவும் தீவிரமாக்கும். உங்கள் நல்ல உணவு பழக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் நோய் தீவிரமாவதை தடுக்கும். தொடர்ந்து 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது நல்ல பலன் தரும். நாள்பட்ட சிறுநீரக நோய் பிரச்சனையில் எடை கூடும். இதற்கு உணவு நிபுணரின் ஆலோசனையின் பேரில் உடல் எடையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பெருங்காயம்: இதை இப்படி பயன்படுத்தினால், 3 பிரச்சனைகள் ஆகும் மாயம், விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ