எலும்புகளை இரும்பை போல் வலுவாக்கும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்!

வலுவான எலும்புகளை பெற பால் தவிர,  சில குறிப்பிட்ட தானியங்களிலிருந்து செய்யப்பட்ட சாப்பாத்திகளை உட்கொள்வதால் விரைவான பலன் கிடைக்கும். இதனால், மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 31, 2023, 11:54 AM IST
  • வயது அதிகரிக்க அதிகரிக்க, எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும்.
  • வயதான காலத்தில் மூட்டு வலியில் பெரும்பாலானோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
  • எலும்பு முறிவு போன்ற பல உடல் நல பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்குகின்றன.
எலும்புகளை இரும்பை போல் வலுவாக்கும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்! title=

எலும்புகள் வலுவாக இருந்தால்தான் நம் உடல் வலுவாக இருக்கும். இதற்கு நாம் எலும்புகளை வலுப்படுத்தும் கால்ஷியம் மற்றும் விட்டமின் டி நிறைந்த சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதற்கு, சரியான தானியத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம். நம்மில் பலருக்கு கோதுமை மாவினால செய்யப்பட்ட சப்பாத்திகளை சாப்பிடும் வழக்கம் உள்ளது. இதற்கு பதிலாக சில குறிப்பிட்ட தாணியங்களில் செய்யப்படும் ரொட்டியை சாப்பிடுவது மிகுந்த பலன் கொடுக்கும். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் ஆயுஷி யாதவ் இது குறித்து கூறுகையில், குறிப்பிட்ட சில  தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் ரொட்டியை நாம் சாப்பிட்டால், அது எலும்புகளுக்கு மிகப்பெரிய பலத்தை தரும்.

தினை மற்றும் ராகி ரொட்டி 

தினை மற்றும் ராகி என்னும் கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட ரொட்டியை நீங்கள் ஒரு முறை நிச்சயம் முயற்சி செய்ய வேண்டும். புரதம், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் என பல சத்துக்கள் இதில் உள்ளது. ராகி எனப்படும் கேழ்வரகு மாவில் செய்யப்படும் ரொட்டிகளை சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். இதனால் நமது எலும்புகள் எப்படி வலுவடையும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். 

1. மூட்டு வலியில் இருந்து நிவாரணம்

வயது அதிகரிக்க அதிகரிக்க, எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும். வயதான காலத்தில் மூட்டு வலியில் பெரும்பாலானோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட நிலையில் தினை, ராகி மாவில் செய்த ரொட்டியை சாப்பிட ஆரம்பித்தால் மூட்டு வலி நீங்கும்.

மேலும் படிக்க | புற்று நோய் முதல் பல நோய்களுக்கு அருமருந்தாகும் கோதுமை புல் ஜூஸ்!

2. கீல்வாதத்தில் இருந்து நிவாரணம்

தினை மற்றும் ராகியில் செய்யப்பட்ட ரொட்டியை தவறாமல் சாப்பிடுங்கள், ஏனெனில் அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.  இது மூட்டுவலி பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

3. எலும்புகள் வலுவாக இருக்கும்

தினையில் கால்சியம் ஏராளமாக உள்ளது, இதனுடன் பாஸ்பரஸும் இந்த தானியத்தை சாப்பிடுவதால் கிடைக்கும். இது நமது எலும்புகளுக்கு அபார வலிமையை அளிக்கிறது. தினை ரொட்டியை தினமும் சாப்பிடுவது நல்லது. எலும்புகள் வலுவிழந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்னும் எலும்பு மெலிதல் நோய், மூட்டு வலிகள், எலும்பு முறிவு போன்ற பல உடல் நல பிரச்சனைகள் நம்மைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்குகின்றன. 

4. எலும்பு முறிவு அபாயம் குறைவாக இருக்கும்

தினசரி உணவில் தினை மற்றும் ராகியில் செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிட்டு வந்தால், சிறு காயங்களால் ஏற்படும் எலும்பு முறிவு அபாயத்தை பெருமளவு குறைக்கும். விரும்பினால் இந்த மாவு இரண்டையும் கலந்தும் ரொட்டி தயாரிக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கோடை வந்து விட்டது... குழந்தைகளுக்கு ‘இந்த’ உணவுகளை கொடுக்காதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News