குடிச்சே குறைக்கலாம்!! தொப்பை, எடை வேகமாக குறைய இந்த ‘மேஜிக்’ பானங்கள் உதவும்

Weight Loss Tips: சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை நன்றாக குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 24, 2023, 09:44 AM IST
  • சோம்பு தண்ணீரை உட்கொள்வது உடல் எடையை விரைவாகக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
  • சோம்பு நச்சு நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
  • மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
குடிச்சே குறைக்கலாம்!! தொப்பை, எடை வேகமாக குறைய இந்த ‘மேஜிக்’ பானங்கள் உதவும் title=

Weight Loss Tips: உடல் பருமன் என்பது மிகவும் தீவிரமான பிரச்சனையாகும், இதன் காரணமாக பல தீவிர நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. ஆகையால் மக்கள் உடல் எடையை குறைக்க பல வகையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் எடை அதிகரிப்பின் காரணமாக மக்கள் பல வித பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் சென்று உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். 

இவற்றாலும் பல சமயங்களில் பெரிய அளவிலான நன்மைகள் கிடைப்பதில்லை. எனினும், சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை நன்றாக குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சில ஆரோக்கியமான பானங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றன. இந்த பானங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதுடன் தொப்பையை குறைத்து உடல் எடையை குறைப்பதிலும் (Weight Loss) உதவுகின்றன. அந்த ஆரோக்கியமான பானங்கள் பற்றி இங்கே காணலாம். 

உடல் எடையை குறைக்க இந்த பானங்களை தினமும் குடிக்கலாம் (Weight Loss Drinks)

சீரக தண்ணீர் 

எடை இழப்புக்கு சீரக நீரை (Cumin Water) உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சீரக நீர் குறைந்த கலோரி பானமாகும். இது தொப்பை கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது மட்டுமின்றி, இதனை உட்கொள்வதால் அடிக்கடி பசி எடுப்பது குறைகிறது. இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இதன் காரணமாக விரைவாக உடல் எடையை குறைக்க முடியும். 

மேலும் படிக்க | தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் சருமம் அழகு மேம்படும், உடல் இளைக்கும்

எலுமிச்சை பாணம்

எலுமிச்சை நீரை (Lemon Water) உட்கொள்வது எடையை விரைவாகக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எலுமிச்சை நீரில் பெக்டின் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக நிறைந்துள்ளன. இது தொப்பை கொழுப்பைக் கரைக்க பெரிதும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க, வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிக்கலாம். இப்படி குடித்து வந்தால் சில நாட்களில் உடல் எடையில் வித்தியாசத்தை காண முடியும்.

தனியா தண்ணீர்

மல்லி தண்ணீர் அதாவது தனியா நீர் (Coriander Water) விரைவாக உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் உடலில் சேரும் கொழுப்பு குறைகிறது, இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க, தனியாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி குடிக்கவும்.

சோம்பு தண்ணீர்

சோம்பு தண்ணீரை (Fennel Water) உட்கொள்வது உடல் எடையை விரைவாகக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. சோம்பு நச்சு நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது விரைவாக எடையைக் குறைக்க உதவுகிறது. ஆகையால், உடல் எடையைக் குறைக்க, சோம்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதை கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான பதத்தில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இதய ஆரோக்கியம் & ரத்த சர்க்கரையை சீராக்கும் ஒமேகா அமிலங்கள், உடலுக்கு ஏன் அவசியம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News