உடல் எடையை ஈசியா கூறைக்க தினமும் இளநீரை இப்படி குடிங்க போதும்

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க (Weight Loss) பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்றார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 3, 2024, 12:58 PM IST
  • ஆப்பிள் மிகவும் ஆரோக்கியமான பழம்.
  • இதில் பல வித ஊட்டச்சத்துகள் உள்ளன.
  • இதில் அதிக அளவு ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன.
உடல் எடையை ஈசியா கூறைக்க தினமும் இளநீரை இப்படி குடிங்க போதும் title=

Weight Loss Tips: இன்றைய மாறிவரும் வாழ்க்கை சூழலில் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மக்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுமுறையும், குறைவான உடல் உழைப்பு மற்றும் உடல் செயல்பாடுகளும், ஒரே இடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்து அதிக வேலை செய்ய வேண்டிய நிலையும் அதிகரிக்கும் உடல் பருமனுக்கு முக்கிய சில காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட வாழ்க்கை முறை தொப்பை கொழுப்பை (Belly Fat) அதிகரித்து மிக வேகமாக உடல் எடையையும் அதிகரிக்கின்றது. 

வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேரத் தொடங்கும் போது, ​​​​உடலின் ஒட்டுமொத்த வடிவமும் கெட்டுவிடுகிறது. இதனால் தன்னம்பிக்கை குறைகிறது. உடல் எடை மற்றும் தொப்பை கொழுப்பு அதிகரிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. இதன் காரணமாக, நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகியவற்றுக்கான அபாயம் அதிகரிக்கலாம். 

உடல் எடையை குறைக்க (Weight Loss) பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்றார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

உடல் எடையை குறைக்க இந்த இயற்கை பானம் உதவும்

இயற்கை பானமான இளநீர் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது நம் உடலுக்கு அதிக நன்மைகளை அளிக்கும் ஒரு பானமாகும். கிராமம், நகரம் என அனைத்து இடங்களில் உள்ள மக்களும் இதை விரும்பி குடிக்கிறார்கள். இதை தொடர்ந்து குடித்து வந்தால் நம் உடலுக்கு பல நன்மகள் கிடைக்கும். இதை குடிப்பதால் உடல் எடையை பெருமளவு குறைக்கலாம்.

இளநீரில் உள்ள சத்துக்கள்

பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ், "இளநீரைக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், உடலுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இயற்கை என்சைம்கள் கிடைக்கும், இதனால் உடல் நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்." என்று கூறுகிறார்.

மேலும் படிக்க | High BP டென்ஷன் இனி வேண்டாம்: இந்த 3 பழங்கள் நிவாரணம் அளிக்கும்.. கண்டிப்பா சாப்பிடுங்க

இளநீர் மூலம் எடையை குறைப்பது எப்ப்படி? 

- இளநீரில் இயற்கையான சர்க்கரை உள்ளது, இதில் சிறிய அளவில் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளன. 

- இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

- இளநீர் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

- இளநீரை ஒரு முறை குடித்தால், நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு இருக்கிறது. இதன் காரணமாக தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. 

- இந்த காரணங்களால் எடை பட்டிப்படியாக குறைகிறது. 

இளநீரில் அதிக தாதுக்கள் இருப்பதால், பழச்சாறுகளை விட இளநீர் (Coconut Water) உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என கூறப்படுகின்றது. 

இளநீர் குடிக்க சரியான நேரம் எது?

இளநீரை எப்போது அருந்தினாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். எனினும் இதை காலையில் குடிப்பது சிறந்ததாக கருதப்படுகின்றது. காலையில் இதை குடிப்பதால், இதன் விளைவு நாள் முழுவதும் தெரிகிறது. இதன் காரணமாக நாள் முழுதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. )

மேலும் படிக்க | இதய ஆரோக்கியம் முதல் விந்து சக்தி வரை... மாயங்கள் செய்யும் பூசணி விதை..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News