Weight Loss Tips: உடல் பருமன் பல நோய்களுக்கு மூல காரணம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆகையால், நமது எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம் ஆகும். ஆனால், சிலர் தங்கள் எடையை விரைவாகக் கட்டுப்படுத்த முயற்சிப்பதையும், ஒரு வாரத்தில் 4 முதல் 5 கிலோ வரை குறைக்க விரும்புவதையும் நாம் அடிக்கடி காண்கிறோம். இருப்பினும், ஒரு வாரத்தில் கணிசமான அளவில் எடை குறைப்பது சரியானதா? இது சாத்தியமா? இதற்கு என்ன செய்ய வேண்டும்? இது தொடர்பாக நிபுணர்களின் கருத்து என்னவாக உள்ளது? இந்த பதிவில் இதை பற்றி விரிவாக காணலாம்.
உடல் எடையை குறைப்பது (Weight Loss) ஒரு சவாலான பணியாக இருக்கலாம், ஆனால் அது சாத்தியமற்றது அல்ல. உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால், உடல் எடையை குறைக்க, ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது மிக அவசியம். குறிப்பாக இரவில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால், உடல் எடையை குறைக்கலாம்.
தொப்பை கொழுப்பை கரைக்கவும் (Belly Fat) உடல் எடையை குறைக்கவும், பல நிபுணர்கள் இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்க பரிந்துரைக்கின்றனர். இது சிலருக்கு சரியாக இருக்கலாம், ஆனால், அனைவராலும் இதை பின்பற்ற முடியாது. ஆனால் இரவில் சாப்பிட்டால், மிக லேசான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான, அதே சமயம், எடையை குறைக்கவல்ல உணவுகளை இரவில் உட்கொள்வது நல்லது. இரவில் ஆரோக்கியமாக சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இதன் காரணமாக உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது. இது தவிர, இரவில் ஆரோக்கியமாக சாப்பிடுவதால், உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும், எனவே நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
இரவில் உட்கொள்ள பல வித லேசான உணவுகள் உள்ளன. இவற்றை கவனமாக தேர்ந்தெடுத்து நீங்கள் உட்கொள்ளலாம். பல நிபுணர்களிடம் ஆலோசித்து, உடல் எடையை குறைக்க இரவு உணவுக்கு ஏற்ற சில உணவு வகைகைகளை இங்கே பகிர்ந்துள்ளோம்.
உடல் எடையை குறைக்க இரவு உணவில் இவற்றை உட்கொள்ளலாம் (Dinner For Weight Loss)
முட்டை சாட்
முட்டை (Egg) ஒரு சிறந்த எடை இழப்பு உணவாகும். இதில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. முட்டையிலும் கலோரிகளும் குறைவாக உள்ளன. ஆகையால், வேகவைத்த முட்டை சாட் தயாரித்து இரவில் சாப்பிடலாம். முட்டையுடன் கருப்பு மிளகு, கருப்பு உப்பு போன்ற மசாலாப் பொருட்களையும் சேர்த்து சுவையை அதிகரிக்கலாம்.
மேலும் படிக்க | கர்ப்பிணிகளே... ‘இந்த’ பழங்களில் இருந்து கொஞ்சம் விலகியே இருங்க..!
ஓட்ஸில் இருந்து தயாரிக்கப்படும் இட்லி
ஓட்ஸ் (Oats) உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஓட்ஸில் புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஓட்ஸில் இருந்து இட்லி செய்து இரவில் சாப்பிடலாம். இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதோடு, தொப்பையை குறைக்கவும் உதவும்.
ஜவ்வரிசி கிச்சடி
ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இதன் காரணமாக அதை சாப்பிடுவது இலகுவாக இருக்கும். எனவே, தினமும் இரவு உணவில் ஜவ்வரிசி கிச்சடியை உட்கொள்ளலாம். இதை செய்ய, ஒரு கப் ஜவ்வரிசியை கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பிறகு கடாயில் நெய்யை சூடாக்கி சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து, பின் உருளைக்கிழங்கு, ஜவ்வரிசி, வேர்கடலை, சேர்த்து, பிறகு உப்பும் கொத்தமல்லியும் சேர்த்து வதக்கவும். விருப்பப்பட்டால், இதில் எலுமிச்சைப் பழ சாற்றையும் சேர்க்கலாம்.
இரவு உணவு சாப்பிட சரியான நேரம்
இரவில் உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும், ஆனால் இரவில் உணவு உட்கொண்டால், தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் உணவு உண்ண வேண்டும். இது செரிமான அமைப்புக்கு உணவை ஜீரணிக்க போதுமான நேரத்தை கொடுக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தீராத மலச்சிக்கலா... சில உணவு முறைகளும் வீட்டு வைத்தியங்களும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ